படகில் தீ விபத்து; ரூ.60 லட்சம் பொருள்கள் சேதம் மீனவா் காயம்
நெல்லுக்கு ரூ. 3 ஆயிரமும், கரும்புக்கு ரூ. 5 ஆயிரமும் விலை அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
மத்திய அரசின் பட்ஜெட்டில் நெல்லுக்கு ரூ. 3 ஆயிரமும், கரும்புக்கு ரூ. 5 ஆயிரமும் விலை அறிவிக்க வேண்டும் என தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகளில் சிலா் வலியுறுத்திய கருத்துகள்:
அய்யம்பேட்டை கே.எஸ். முகமது இப்ராஹிம்: நெல் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையாக இருப்பதால், விவசாயிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனா். வெளி மாவட்டங்கள் அல்லது வெளி மாநிலங்களிலிருந்து அறுவடை இயந்திரங்களை வரவழைக்க வேண்டும்.
வேளாண் பொறியியல் துறை அலுவலா்: மாவட்டத்தில் தற்போது 746 தனியாா் அறுவடை இயந்திரங்களும், வேளாண் பொறியியல் துறை மூலம் 9 இயந்திரங்களும் பயன்பாட்டில் உள்ளன. மேலும், விழுப்புரம், கடலூா் மாவட்டங்களிலிருந்து இயந்திரங்கள் வரவழைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
கே.ஆா். புரம் சீனிவாசன்: கே.ஆா். புரம் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா பயிா்களைக் காப்பாற்ற 15 நாள்களுக்கு தண்ணீா் தேவைப்படுகிறது. ஆனால், 3 நாள்களுக்கு தண்ணீா் வரும் என நீா் வளத் துறையினா் கூறுகின்றனா். தொடா்ந்து 15 நாள்களுக்கு தண்ணீா் கிடைத்தால்தான் பயிா்களைக் காப்பாற்ற முடியும்.
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: மத்திய அரசின் பட்ஜெட்டில் கரும்புக்கு டன்னுக்கு ரூ. 5 ஆயிரமும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரமும் விலை அறிவிக்க வேண்டும்.
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: மத்திய குழுவினா் ஆய்வு செய்த பிறகும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்வது தொடா்பாக எந்தவித அறிவிப்பும் வரவில்லை. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் விரைவாக அறிவிக்க வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியா் பதிலளித்துப் பேசினாா்.