முதல்வரின் ஒப்புதலுடன்தான் மாவட்டச் செயலாளர், அதிகாரிகளை மிரட்டினாரா? - அன்புமணி...
கும்பமேளாவில் பெண்கள் நீராடும் விடியோவை பதிவிட்ட யூடியூபர் கைது!
மகா கும்பமேளாவில் நீராடும் பெண்களை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த யூடியூபரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்றது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் ஜன. 13 முதல் பிப். 26 வரை 65 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
இதையும் படிக்க : புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!
இந்த நிலையில், திரிவேணி சங்கமத்தில் பெண்கள் நீராடுவதை விடியோவாக பதிவிட்டு ஆயிரக்கணக்கில் சமூக ஊடகங்களில் விற்கப்படும் சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச சைபர் போலீஸார் சமூக ஊடகங்களில் இருக்கும் விடியோக்களை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், விடியோக்களை பதிவிடும் கும்பலை தேடி வந்தனர்.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி பகுதியைச் சேர்ந்த அமித் குமார் என்ற யூடியூபரை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிஎன்எஸ் 296/79 மற்றும் சைபர் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யூடியூபில் அதிக பின்தொடர்பாளர்களை பெறுவதற்கும் பணம் சம்பாதிப்பதற்காகவும் பெண்களின் விடியோக்களை பதிவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.