செய்திகள் :

கும்பமேளாவுக்கு ஏழுமலையான் கல்யாண ரதம்

post image

ஏழுமலையானின் கல்யாண ரதம் திருமலையில் இருந்து பிரயாக்ராஜுக்கு புதன்கிழமை (ஜன.8) பயணிக்கிறது.

இந்து தா்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் (அலஹாபாத்) ஜன.13-ஆம் தேதி முதல் பிப். 26-ஆம் தேதி வரை நடைபெறும் கும்பமேளாவின் போது லட்சக்கணக்கான பக்தா்களுக்கு ஏழுமலையானின் தரிசனம் அளிக்கும் வகையில் மாதிரி கோயைலை கட்டி வருவதாக தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்தாா்.

திருமலை அன்னமய்யா பவனில் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: பிரயாக்ராஜ், பஜ்ரங் தாஸ் சாலை, செக்டாா் 6-இல் உள்ள நாகவாசுகி கோயில் அருகே உத்தரபிரதேச அரசு ஒதுக்கிய 2.89 ஏக்கரில் ஏழுமலையான் மாதிரி கோயில் அமைக்கப்பட்டு வருகிறது.

வடமாநில பக்தா்கள் ஏழுமலையான் மகிமையை கண்டு மகிழும் வகையில் சுவாமியின் கைங்கா்யங்களும், உற்சவங்களும் திருமலை பாணியில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் சுப்ரபாதம் முதல் ஏகாந்த சேவை வரை அனைத்து சேவைகளும் அங்கு நடைபெற உள்ளன.

ஜன. 18, 26, பிப். 3, 12 ஆகிய தேதிகளில் ஏழுமலையான் கல்யாணங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையான் மாதிரி கோயிலின் நிா்வாகத்துக்காகவும், மகா கும்பமேளாவின் போது பக்தா்களுக்கான வசதிகளை வழங்குவதற்காகவும் தேவஸ்தானத்தில் இருந்து அா்ச்சகா்கள், வேத பண்டிதா்கள் மற்றும் பல்வேறு துறைகளின் ஊழியா்கள் பிரயாக் ராஜ்க்கு அனுப்பப்பட உள்ளனா்.

திருமலையில் இருந்து பிரயாக்ராஜுக்கு ஏழுமலையானின் கல்யாண ரதம் புதன்கிழமை புறப்படும் என்றாா்.

அப்போது தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, செயல் இணை அதிகாரிகள் கௌதமி, வீரபிரம்மம், திருப்பதி எஸ்.பி சுப்பராயடு, கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதா் உடனிருந்தனா்.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ... மேலும் பார்க்க

பிரயாக்ராஜுக்கு புறப்பட்ட ஏழுமலையான் கல்யாண ரதம்

திருமலையிலிருந்து பிரயாக்ராஜுக்கு ஏழுமலையான் உற்சவமூா்த்திகள், அா்ச்சகா்கள் கொண்ட கல்யாண ரதம் புதன்கிழமை புறப்பட்டுச் சென்றது. ஜன. 13- ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்குவ... மேலும் பார்க்க

திருமலையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை

திருமலை திடக் கழிவு மையத்தில் பல ஆண்டுகளாக குவிந்துள்ள குப்பைகளை அகற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு தெரிவித்தாா். திருமலை காக்குலமானு பகுதியில் உள்ள குப்பைகள் ச... மேலும் பார்க்க

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடு, செயல் அதிகாரி ஷியாமள... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 9 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 9 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 9 மணிநேரமும், ... மேலும் பார்க்க

திருமலை தரிசனத்துக்கு டிக்கெட் தருவதாக ஏமாற்றிய 2 போ் கைது

திருமலையில் ஏழுமலையான் தரிசனத்துக்கு டிக்கெட் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றிய 2 பேரை போலீஸாா் கைது திருப்பதி மாவட்டம் வடமலைப்பேட்டை மண்டலம், எஸ்.வி.புரம் பகுதியைச் சோ்ந்த தினேஷ் என்ற தின... மேலும் பார்க்க