செய்திகள் :

குஷி மறுவெளியீட்டு டிரைலர்..! எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி!

post image

நடிகர் விஜய், நடிகை ஜோதிகா நடிப்பில் உருவான குஷி திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்த டிரைலரை படத்தின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் கடந்த 2000-இல் வெளியாகிய குஷி திரைப்படம் அன்றைய காலத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிட்டிருந்தது.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை மீண்டும் மறுவெளியீடு செய்கிறது. கில்லி வசூலை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், இதன் மறுவெளியீட்டு டிரைலரை வெளியிட்டு எஸ்.ஜே.சூர்யா, “மீண்டும் தளபதி விஜய். குஷி மீண்டும் வருகிறது. செப்.25ஆம் தேதி மீண்டும் கலக்குகிறோம். தளபதி விஜய்யைக் கொண்டாடுவோம். ஜோதிகா, ஏஎம் ரத்னம், தேவா, அமரர் ஜீவா, விவேக் மற்றும் படக்குழுவுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.

The re-release trailer of the film Khushi, starring actor Vijay and actress Jyothika, has been released.

ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!

பிரதமர் மோடியின் பாடலுக்கு இசையமைத்ததால் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திரைத்துறையில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைத்து வருகிறார். வெயில் திரைப்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

சாம்பியன்ஸ் லீக்கில் லிவர்பூல் கால்பந்து வீரரரும் எகிப்திய அர்சன் என்று அழைக்கப்படும் முகமது சாலா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அத்லெடிகோ மாட்ரிட் உடனான போட்டியில் லிவர்பூல் அணி 3-2 என த்ரில் வெற்ற... மேலும் பார்க்க

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சீனா மாஸ்டர்ஸில் ரவுண்ட் ஆஃப் 32-இல் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் பி.வி.சிந்து காலிறுத்திக்கு முன்னேறியுள்ளார். சீன மாஸ்டர்ஸில் ரவுண்ட் ஆஃப் 32-இல் ... மேலும் பார்க்க

கல்கி ஏடியில் தீபிகா படுகோன் இல்லை... தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

கல்கி ஏடி2898 இரண்டாம் பாகத்தில் நடிகை தீபிகா படுகோன் இருக்க மாட்டார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குந்ர அஸ்வின் நாக் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், கமல் ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச... மேலும் பார்க்க

ஆர்வத்தைத் தூண்டும் சக்தித் திருமகன் ஸ்னீக் பீக்!

விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவாகியுள்ள சக்தித் திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி ... மேலும் பார்க்க

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்த நி... மேலும் பார்க்க