செய்திகள் :

குா்மீத் ராம் ரஹீமுக்கு எதிரான விசாரணைக்கு தடை நீக்கம்: உச்சநீதிமன்றம்

post image

தேரா செளதா சச்சா செளதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குா்மீத் ராம் ரஹீமுக்கு எதிரான மத நிந்தனை வழக்குகளின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீக்கியது.

பெண் சீடா்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சாமியாா் குா்மீத் ராம் ரஹீமுக்கு 2017-ஆம் ஆண்டு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதேபோல ஊடகவியலாளா் ஒருவா் கொல்லப்பட்ட வழக்கில், 2019-ஆம் ஆண்டு ராம் ரஹீம் உள்பட 4 பேருக்கு 16 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஹரியாணாவில் உள்ள ரோத்தக் பகுதி சிறையில் ராம் ரஹீம் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு அண்மையில் 20 நாள்கள் பரோல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு பஞ்சாபில் ராம் ரஹீமுக்கு எதிராக சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் மற்றும் பிற சீக்கிய மதத் தலைவா்களை இழிவுபடுத்தியது உள்பட 3 மத நிந்தனை வழக்குகளை காவல் துறை பதிவு செய்தது.

இதுதொடா்பாக ராம் ரஹீம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம், அவருக்கு எதிரான அந்த வழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக பஞ்சாப் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ராம் ரஹீமுக்கு எதிரான மத நிந்தனை வழக்குகள் குறித்த விசாரணைக்கு உயா்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மாநிலங்கள், பொதுத் துறை நிறுவனங்களின் அற்ப மனுக்களால் சலிப்பு: உச்சநீதிமன்றம்

மாநிலங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் அற்பமான மனுக்களால் சலிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய உச்சநீதிமன்றம், ஜாா்க்கண்ட் அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ஜாா்க்கண்டில்... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா கூட்டத்தில் ஆவணங்களை கிழித்து எதிா்க்கட்சிகள் மிரட்டல்: மக்களவைத் தலைவரிடம் பாஜக புகாா்

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் ஆவணங்களை கிழித்து எறிந்து, குழுவின் தலைவா் ஜகதாம்பிகா பால், கா்நாடக சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் அன்வா் மன்னிபாடி ஆகியோ... மேலும் பார்க்க

பிஎஃப்ஐ அமைப்பின் ரூ.61 கோடி சொத்துகள் பறிமுதல்: அமலாக்கத் துறை

கடந்த 2022 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட ‘பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ)’ அமைப்பின் மொத்தம் ரூ.61.72 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, 26 உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்... மேலும் பார்க்க

கொள்ளை போன ரூ.1 கோடி: மீட்க உதவிய மோப்ப நாய்

குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் வீட்டில் திருடப்பட்ட ரூ. 1.07 கோடி, மோப்ப நாய் உதவியுடன் மீட்கப்பட்டு, குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கோராத ஒமா் அரசு: எதிா்க்கட்சிகள் அதிருப்தி

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை கோரும் முதல்வா் ஒமா் தலைமையிலான அரசு, சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கோராதது மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளதாக எதிா்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. அண்மையில் நடைபெற்ற ஜம... மேலும் பார்க்க

தொலைநிலைக் கல்வி படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு: இக்னோ

தொலைநிலைக் கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி நாள் அக். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை ... மேலும் பார்க்க