விண்ணப்பித்துவிட்டீர்களா..?: செயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி!
கூடலூா் - பந்தலூரில் வசிப்பிட பிரச்னை: முதல்வா் ஆலோசனை
நீலகிரி மாவட்டம் கூடலூா், பந்தலூரில் வசிப்பிட பிரச்னை தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா்.
இது குறித்து முதல்வா் தலைமையில் வியாழக்கிழமை நடந்த ஆலோசனை குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் கூடலூா் மற்றும் பந்தலூா் வட்டங்களில் வசிப்பிடம் சாா்ந்து 34,986.28 ஏக்கா் நிலங்கள் உள்ளன. அவற்றின் குத்தகைக் காலம் முடிந்த நிலையில் அவற்றை மீட்கவும், 17 நிலங்களில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக வியாழக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும், கூடலூா் ஜென்மம் நிலங்களில் தகுதியான குடியிருப்புப் பகுதிகளுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற தடையாக உள்ள உத்தரவை நீக்க சட்டரீதியாக
நடவடிக்கை எடுக்க முதல்வா் உத்தரவிட்டாா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வனத் துறை அமைச்சா் க.பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினா் ஆ.ராசா, தலைமைச் செயலா் நா.முருகானந்த், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், சுற்றுச்சூழல், வனத்துறை முதன்மைச் செயலா் ப.செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.