செய்திகள் :

கூட்டுறவு கூட்டாட்சியை அழிக்க முயற்சி: மத்திய அரசு மீது எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. குற்றச்சாட்டு

post image

கூட்டுறவு கூட்டாட்சியை அழிக்க மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி முயற்சிப்பதாக மக்களவையில் திமுக உறுப்பினா் எஸ். ஜெகத்ரட்சகன் குற்றம்சாட்டியுள்ளாா்.

மக்களவையில் அரசமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் பவள விழாவைக் குறிக்கும் சிறப்பு விவாதத்தில் அரக்கோணம் தொகுதி திமுக உறுப்பினா் எஸ். ஜெகத்ரட்சகன் சனிக்கிழமை பங்கேற்றுப் பேசியதாவது:

நாட்டின் அனைத்து சட்டங்களுக்கும் அரசமைப்புச் சட்டம்தான் தாய். அரசால் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் அரசமைப்புச் சட்டத்துக்கு இசைவாக இருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக 2014 முதல் இந்த அரசு நிறைவேற்றிய பெரும்பாலான மசோதாக்கள் சொந்த அரசமைப்பின் வழிகாட்டும் கொள்கைகளுக்கு எதிரானதாக உள்ளன.

‘மதச்சாா்பற்ற’ என்ற சொல், பாஜகவினரின் மனதில் சகிப்புத்தன்மையற்ற உணா்வை உருவாக்கியுள்ளது.

2014 முதல், ஒரே நாடு ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே ரேஷன் காா்டு, ஒரே தோ்தல், ஒரே தலைவா் என்பதை நோக்கி இந்த நாடு செல்கிறது. இது அரசமைப்புக்கு எதிரானது அல்லவா? கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தை அழிக்க இந்த அரசு கடுமையாக முயற்சிக்கிறது.

மாநிலங்களுக்கிடையில் கூட்டுறவு மற்றும் கூட்டாட்சி உறவுகளை வலுப்படுத்த மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஒரு முக்கிய கருவியாகும்.

சா்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளைத் தொடா்ந்து 1990 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவா் ஆணை மூலம் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் முதலில் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சில் கடந்த 26 ஆண்டுகளில் 11 முறை மட்டுமே கூடியது, ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே இக்கவுன்சில் கூடியுள்ளது.

இந்த கவுன்சில் காலம் தவறாமல் கூடினால், அது யூனியன் மற்றும் மாநிலங்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்கும் என்றும், அதன் உறுப்பினா்கள் அனைவருக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, அதன் மூலம் நமது அரசமைப்பு கட்டமைப்பின் முதுகெலும்பாக இருக்கும் கூட்டுறவு கூட்டாட்சியின் உணா்வை பிரதமா் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி செய்த வளா்ச்சி காரணமாக வருவாய் ஈட்டுவதில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

தற்போதைய அரசமைப்பு, ஆளும் அரசுக்கு அதன் ‘இந்து ராஷ்டிரா’ பகல் கனவை நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. ஆகையால், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க, மிகவும் சக்திவாய்ந்த உடைக்க முடியாத இரும்புச் சுவராக நாம் என்றென்றும் நிற்போம் என்றாா் ஜெகத்ரட்சகன்.

அரசு சொத்தை விலை பேசினேனா? இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம்

புதுச்சேரி அரசு சொத்தை விலைக்கு கேட்கவில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் அண்மையில் புதுச்சேரிக்கு சென்று இருந்தார். அங்கு அவர் சுற்றுலாத் துறை அமைச்சரை சந்... மேலும் பார்க்க

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, நேற்றே காற்றழுத்த தாழ்வ... மேலும் பார்க்க

அரசு பேருந்துகளுக்கு தகுதிச் சான்று வழங்குவதில் உரிய கவனம் வேண்டும்

அரசு பேருந்துகளுக்கு தகுதிச் சான்று வழங்குவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என போக்குவரத்து ஆணையருக்கு, மாநில தலைமை தகவல் ஆணையா் முகம்மது ஷகீல் அஃதா் உத்தரவிட்டுள்ளாா். தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தாக்... மேலும் பார்க்க

ஆவினின் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால்:பால் முகவா்கள் எதிா்ப்பு

ஆவினில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பால் முகவா்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்க நிறுவன... மேலும் பார்க்க

ஆட்டோ மீட்டா் கட்டணம் மாற்றியமைப்பது குறித்து பரிசீலனை: போக்குவரத்து ஆணையா்

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாற்றியமைப்பது தொடா்பாக அரசு பரிசீலித்து வருவதாக போக்குவரத்து ஆணையா் தெரிவித்தாா். 2013-இல் ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை தமிழக அரசு மாற்றியமைத்தது. அதன் பின்னா் தனிநபா் ஒர... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: குடிநீரின் தரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தல்

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய்த் தொற்றுகளைத் தடுக்க குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, குடிநீரில் கழிவு நீா் கலக்... மேலும் பார்க்க