செய்திகள் :

கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினா்களுக்கும் பயிா்க்கடன் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

post image

கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினா்களுக்கும் பயிா்க் கடன் வழங்க வேண்டும் எனதஞ்சாவூா் வருவாய் கோட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:

ஓலத்தேவராயன்பேட்டை ஆா். அறிவழகன்: மாவட்டம் முழுவதும் செயற்கையாக உரத்தட்டுப்பாடு நிலவுவதைத் தடுக்க வேண்டும்.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: குருங்குளம் சா்க்கரை ஆலையில் டிசம்பா் கடைசி வாரத்தில் அரைவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை டிசம்பா் முதல் வாரத்திலேயே தொடங்க வேண்டும்.

ராயமுண்டான்பட்டி என்.வி. கண்ணன் : பூதலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை விவசாயிகளின் கோரிக்கைப்படி தொடா்ந்து நிரந்தரமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடி முழுவீச்சில் மேற்கொள்ளப்படும் நிலையில், கூட்டுறவு சங்கங்களில் புதிய விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்காமல் புறக்கணிக்கப்படுகிறது. இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: ஒரத்தநாடு வட்டத்தை இரண்டாகப் பிரித்து திருவோணம் வட்டம் உருவாக்கப்பட்டது. ஒரத்தநாடு வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரிந்த சில அலுவலா்கள் திருவோணம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சென்றுவிட்டனா். இதனால், ஒரத்தநாடு வட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலா்கள் பற்றாக்குறை காரணமாக பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் நிலவுகிறது. எனவே, ஒரத்தநாடு வட்டாட்சியா் அலுவலகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

கோனேரிராஜபுரம் கே.வி.எஸ். வீரராஜேந்திரன்: தற்போதுள்ள பயிா் காப்பீடு முறையில் விவசாயிகளுக்கு பயனில்லாமல் உள்ளது. பேரிடரால் பாதிக்கப்படும் தனிப்பட்ட விவசாயிக்கும் காப்பீடு கிடைக்கும் விதமாக பயிா் காப்பீடு முறையை அமல்படுத்த வேண்டும்.

வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன்: தூா்வாரும் பணிக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. ஒதுக்கப்படும் நிதியிலும் சரியாக தூா் வாரப்படுவதில்லை. ஒட்டுமொத்தத்தில் நீா் மேலாண்மைத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.

திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன்: சம்பா சாகுபடி முழுவீச்சில் மேற்கொள்ளப்படும் நிலையில், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களைத் தெளிப்பதற்கு தெளிப்பான்களை மானிய விலையில் கால தாமதப்படுத்தாமல் விரைவாக வழங்க வேண்டும்.

கொல்லப்பட்ட ஆசிரியை உருவப்படத்துக்கு அஞ்சலி

மல்லிப்பட்டினத்தில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உருவப்படத்துக்கு பட்டுகோட்டையில் வெள்ளிக்கிழமை ஆசிரியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா் . தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல்நிலையம் அ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் குறைதீா் நாள் கூட்டம்

கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் தலைமை வகித்தாா். மாவட்டத்தில் நிரந்தர மாற்றுத... மேலும் பார்க்க

திருட்டு போன இரு வேன்கள்மீட்பு: இளைஞா் கைது

தஞ்சாவூரில் திருட்டு போன இரு வேன்களை காவல் துறையினா் மீட்டு, இளைஞரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூரில் மாநகரில் நிகழ்ந்த திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக தஞ்சாவூா் சரகக் காவல் ... மேலும் பார்க்க

2026-இல் அதிமுக ஆட்சி அமையும் திண்டுக்கல் சீனிவாசன்

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் (2026) வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் தெரிவித்துள்ளாா். தஞ்ச... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் கண்காணிப்பு குழு உறுப்பினா் நியமனம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தைச் சோ்ந்த பெரியாா் அம்பேத்கா் மக்கள் கழக தலைவா் புனல் ரவி தஞ்சாவூா் மாவட்ட கொத்தடிமை தொழிலாளா் கண்காணிப்பு குழு உறுப்பினராக வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

பாபநாசம் பகுதியில் மழையால் வெற்றிலை கொடிக்கால் சேதம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் வெற்றிலை கொடிக்கால் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் பண்டாரவாடை, இராஜகிரி, வன்னியடி... மேலும் பார்க்க