செய்திகள் :

கேதர்நாத் யாத்திரை: ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்குத் தடை விதிக்க பாஜக கோரிக்கை!

post image

கேதர்நாத் யாத்திரை செல்பவர்களில் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு தடை விதிக்க பாஜக கோரிக்கை வைத்துள்ளது.

கேதார்நாத் யாத்திரை தொடர்பான மேலாண்மை கூட்டம் இன்று நடைபெற்றது. கேதர்நாத் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ ஆஷா நௌதியல் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் கவனிக்கப்படாத சில பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கேதர்நாத் கோவில் குறித்து மக்கள் எழுப்பிய பிரச்சினைகளுடன் உடன்படுவதாகத் தெரிவித்த நௌதியல், கேதார்நாத் கோவிலுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சிலர் நடந்துகொள்வதாகவும், அவர்கள் கேதர்நாத் வளாகத்திற்குள் நுழையத் தடை விதிக்கக் கோரிக்கை வைக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், இவ்வாறு செய்பவர்கள் கோவிலில் அவதூறான காரியங்களை செய்ய வரும் ’இந்துக்கள் அல்லாதவர்கள்’ என்று நௌதியல் குற்றச்சாட்டு வைத்தார்.

இதையும் படிக்க | பல்கலை வளாகத்தில் தொழுகை நடத்திய மாணவர்கள்: நிர்வாகம் மீது காவல்துறை வழக்குப்பதிவு!

முன்னதாக, உத்தரகாண்ட் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக கேதர்நாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப்பில் உள்ள இரண்டு ரோப்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது தொடர்பாகக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தத் திட்டங்கள் நிறைவடைந்தவுடன், இரண்டு புனித யாத்திரைத் தலங்களுக்கும் வருபவர்களுக்கு விரைவான, சிறப்பான அனுபவம் கிடைக்கும்.

அதில், கேதார்நாத்தில் உள்ள சோன்பிரயாக் 12.9 கிமீ ரோப்வே திட்டமாகும். இது வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, இயக்குதல் மற்றும் பரிமாற்றம் முறையில் உருவாக்கப்படவுள்ளது. இதன் மொத்தச் செலவு ரூ.4,081.28 கோடி.

இந்த ரோப்வே பொது-தனியார் கூட்டாண்மையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஒரு மணி நேரத்திற்கு ஒரு திசையில் 1,800 பயணிகளையும், ஒரு நாளைக்கு 18,000 பயணிகளையும் ஏற்றிச் செல்ல முடியும்

தானாப்பூா் - பெங்களூரு ரயில் சேவை நீட்டிப்பு!

தானாப்பூா் - பெங்களூரு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் மேலும் இரு நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

அமெரிக்க உளவுத் துறை இயக்குநருடன் அஜீத் தோவல் சந்திப்பு!

அமெரிக்க தேசிய உளவுத் துறை இயக்குநா் துளசி கப்பாா்டை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். அமெரிக்க தேசிய உளவுத் துறை இயக்குநா் துளசி கப்பாா்ட் இரண... மேலும் பார்க்க

இந்தியா - சீனா போட்டி, மோதலாக மாறக் கூடாது: பிரதமர் மோடி

இந்தியா - சீனா இடையிலான போட்டி மோதலாக மாறக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் இயற்கையானவை என்றும், ஆனால், உலகின் நிலைத்தன்மைக்காக வலுவான கூட்டு ஒத்துழைப... மேலும் பார்க்க

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வணிக ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வணிக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கும் நியூ... மேலும் பார்க்க

வளர்ச்சிப் பாதையில் வடகிழக்கு மாநிலங்கள்: அமித் ஷா

கிளர்ச்சி, வன்முறை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லப்பட்டுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.அஸ்ஸாம் மாநிலத்தின் க... மேலும் பார்க்க

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய உதவியது ஆர்.எஸ்.எஸ்: மோடி

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய ஆர்.எஸ்.எஸ். தனக்கு உதவியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். செய்யறிவு தொழில்நுட்ப ஆய்வாளர் லெக்ஸ் ஃபிரிட்மேன் உடனான நேர்காணலின்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏஐ குறித்த... மேலும் பார்க்க