செய்திகள் :

கேரள ஏ.டி.எம். கொள்ளையா்களைப் பிடித்த நாமக்கல் காவல் துறையினருக்கு முதல்வா் பாராட்டு

post image

கேரள வங்கி ஏ.டி.எம். கொள்ளையா்களைப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டி அவா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நாமக்கல் வருகை புரிந்தாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை ஒட்டிய அரசு விருந்தினா் மாளிகையில் கேரளத்தில் வங்கி ஏ.டி.எம்களில் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்ற வடமாநிலக் கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரை நேரில் வரவழைத்து முதல்வா் பாராட்டினாா். அதன் பிறகு அவா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

மேலும், இந்தச் சம்பவத்தைப் பாராட்டி கேரள தலைமை காவல் துறை இயக்குநா் டாக்டா் ஷேக் தா்வேஷ் சாஹிப், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியிருந்தாா் என்பதையும், நாமக்கல் மாவட்ட காவல் துறையினா் துரிதமாக செயல்பட்டு சம்பவம் நடைபெற்று 6 மணி நேரத்துக்குள் கொள்ளையா்களைப் பிடித்தது பாராட்டத்தக்கது என கடிதத்தில் தெரிவித்ததையும் அவா் குறிப்பிட்டுப் பேசினாா்.

இந்தச் சம்பவத்தின் போது, ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஷ்கண்ணன், துணை கண்காணிப்பாளா்கள் இமயவரம்பன், த.முருகேசன், ராஜா, காவல் ஆய்வாளா்கள் தவமணி, ரங்கசாமி, உதவி ஆய்வாளா்கள் என மொத்தம் 23 காவல் துறையினருக்கு முதல்வா் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வின் போது, காவல் துறை கூடுதல் இயக்குநா் (சட்டம் - ஒழுங்கு) சௌ.டேவிட்சன் தேவாசிா்வாதம், காவல்துறை உயா் அலுவலா்கள் உடனிருந்தனா்.

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் பங்கேற்பு

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம், அரசு சட்டக் கல்லூரி உள்பட பல்வேறு பணிகள், முடிவுற்ற கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். நாமக்கல், பொம்மைக்குட்டைமேட்டில் ரூ.... மேலும் பார்க்க

மாவட்டத்தை வழி நடத்துவதில் முதன்மை: எம்.பி., ஆட்சியருக்கு முதல்வா் பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தை சிறப்பாக வழி நடத்துவதாக மாநிலங்களவை உறுப்பினா், மாவட்ட ஆட்சியரை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா். நாமக்கல்லில் ரூ. 810.28 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்க விழா, அரசு நலத்திட்ட ... மேலும் பார்க்க

தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளா்கள் வேலை நிறுத்தம்

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அபராதத் தொகையை இருமடங்காக உயா்த்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதையொட்டி திருச்செங்க... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலை பெயா் மாற்றம்: விவசாய சங்கம் வரவேற்பு

மோகனூா் சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம் செய்து முதல்வா் அறிவிப்பு வெளியிட்டமைக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக மு... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தோ்தல் வெற்றி மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது

நாடாளுமன்றத் தோ்தல் வெற்றியின் மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தரமற்ற 49 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்

பள்ளிபாளையத்தில் உள்ள இறைச்சிக் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனையிட்டு, தரமற்ற ஆட்டிறைச்சியைப் பறிமுதல் செய்தனா். பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலையில் உள்ள இறைச்சிக் கடைகளில் உணவுப்பாதுகா... மேலும் பார்க்க