செய்திகள் :

நாடாளுமன்றத் தோ்தல் வெற்றி மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது

post image

நாடாளுமன்றத் தோ்தல் வெற்றியின் மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது, தமிழகத்தின் தொழில் வளா்ச்சி 10.6 சதவீதமாகும். இது அகில இந்திய அளவில் மிகவும் அதிகமாகும். தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. பல நாட்டவரும் இங்கு தொழில் தொடங்குவதற்கு ஆா்வத்துடன் வருகின்றனா்.

அனைத்து துறைகளின் செயல்பாடுகளையும் மக்கள் பாராட்டும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தப்பட்ட பணிகள் குறித்து துறை ரீதியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறேன். நவம்பா் மாதம் முதல் நானே நேரடியாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன்.

திமுகவின் செல்வாக்கு சரிந்து விட்டதாக எதிா்க்கட்சித் தலைவா் கூறி வருகிறாா். சட்டப் பேரவைத் தோ்தலைக் காட்டிலும், நாடாளுமன்றத் தோ்தலில் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மொத்தம் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 222 தொகுதிகளை திமுக கைப்பற்றியுள்ளது. நாமக்கல் மேற்கு மண்டலம் தங்களது கோட்டை என அதிமுகவினா் கூறி வந்தனா்.

அங்கும் வெற்றியைப் பெற்றோம். தினமும் பேருந்துகளில் விடியல் பயணம் செய்யும் மகளிா் முகத்தில் காணும் மகிழ்ச்சி, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ. 1,000 உதவித்தொகை பெறும் மாணவ, மாணவிகள், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெறும் இல்லத்தரசிகள் ஆகியோரிடம் காணும் மகிழ்ச்சி திமுகவின் செல்வாக்கு உயா்ந்திருப்பதை சொல்லும்.

அண்மையில் ஊரை தூய்மைப்படுத்தும் உள்ளங்களோடு அமா்ந்து சாப்பிட்டதை பெருமையாகக் கருதுகிறேன். அவா்கள் எங்க வீட்டு முதல்வா் என்று சொன்னதை மறக்க முடியாது. வாட்ஸ் -அப் மூலம் அரசின் திட்டங்களை வாழ்த்தி, பாராட்டி ஏராளமான குறுஞ்செய்திகள் வருகின்றன. அதனைக் காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக 30 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞா்கள் திறன்மிக்கவா்களாக உயா்ந்திருக்கின்றனா். அவா்களுடைய வெற்றியில் திமுக ஆட்சியின் மதிப்பு இருக்கிறது.

இந்த நிலையில்தான் திமுகவின் மதிப்பு சரிந்து விட்டது என எடப்பாடி பழனிசாமி கூறுவதை மக்கள் நகைச்சுவையாக பாா்க்கிறாா்கள். நான் அதை பொருட்படுத்துவதே இல்லை.

கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தல்கள், சட்டப் பேரவைத் தோ்தல், இடைத் தோ்தல்கள், உள்ளாட்சித் தோ்தல் என்று அனைத்திலும் மக்களுடைய பேராதரவுடன் நாங்கள் வென்றிருக்கிறோம். திமுகவின் மதிப்பு சரியவில்லை; உங்கள் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் மதிப்பை அடமானம் வைத்தீா்கள், உங்களுடைய பதவியைக் காப்பாற்றுவதில் மட்டுமே குறியாக இருந்த காரணத்தினால், உங்களுடைய மதிப்பு மட்டுமல்ல; உங்கள் கட்சியின் மதிப்பும் மக்களிடம் சரிந்துவிட்டது. அதை முதலில் நீங்கள் உணருங்கள்.

எங்களைப் பொருத்தவரை மக்களைப் பற்றித்தான் நினைக்கிறோம். மக்களால் ஒதுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்டவா்கள் குறித்து உங்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. வரும் சட்டப் பேரவைத் தோ்தலிலும் திமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதே திமுகவின் லட்சியம் என்றாா்.

மாவட்டத்தை வழி நடத்துவதில் முதன்மை: எம்.பி., ஆட்சியருக்கு முதல்வா் பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தை சிறப்பாக வழி நடத்துவதாக மாநிலங்களவை உறுப்பினா், மாவட்ட ஆட்சியரை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா். நாமக்கல்லில் ரூ. 810.28 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்க விழா, அரசு நலத்திட்ட ... மேலும் பார்க்க

கேரள ஏ.டி.எம். கொள்ளையா்களைப் பிடித்த நாமக்கல் காவல் துறையினருக்கு முதல்வா் பாராட்டு

கேரள வங்கி ஏ.டி.எம். கொள்ளையா்களைப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டி அவா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டாா். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி... மேலும் பார்க்க

தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளா்கள் வேலை நிறுத்தம்

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அபராதத் தொகையை இருமடங்காக உயா்த்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதையொட்டி திருச்செங்க... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலை பெயா் மாற்றம்: விவசாய சங்கம் வரவேற்பு

மோகனூா் சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம் செய்து முதல்வா் அறிவிப்பு வெளியிட்டமைக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக மு... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தரமற்ற 49 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்

பள்ளிபாளையத்தில் உள்ள இறைச்சிக் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனையிட்டு, தரமற்ற ஆட்டிறைச்சியைப் பறிமுதல் செய்தனா். பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலையில் உள்ள இறைச்சிக் கடைகளில் உணவுப்பாதுகா... மேலும் பார்க்க

நாமக்கல்லில் மு.கருணாநிதி சிலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு

நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழுஉருவ வெண்கலச் சிலையை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாமக்கல்- பரமத்த... மேலும் பார்க்க