பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் திருமண மண்டபம் அமைக்கும் பணி: முதல்வா் தொடங்கிவைத்தாா்
பெருமாநல்லூரில் இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமான கொண்டத்து காளியம்மன் கோயிலில் திருமண மண்டபம் அமைக்கும் பணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
திருப்பூரின் பண்ணாரி எனப் போற்றப்படுவதாக பெருமாநல்லூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் ரூ. 5 கோடியே 40 லட்சம் மதிப்பில் புதிய திருமண மண்டபம் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. இப்பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ரத்தினவேல் பாண்டியன், உதவி ஆணையா் தனசேகரன், உதவி செயற்பொறியாளா் சத்தியா, உதவிப் பொறியாளா்கள் காா்த்திக், கோபாலகிருஷ்ணன், தக்காா் சீனிவாசன், செயல் அலுவலா் சங்கரசுந்தரேஸ்வரன்,
பொறுப்பாளா்கள் தங்கராஜ், விஸ்வநாதன், முன்னாள் அறங்காவலா் சி.எஸ்.மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.