அதானி வெளிநாட்டில் குடியேற ஆயத்தம்? சுப்பிரமணியன் சுவாமி சொன்ன விஷயம்
கோயிலுக்கு பாரம்பரிய உடை அணிந்து செல்ல வேண்டும்: முன்னாள் தலைமை நீதிபதி பேச்சு
கோயிலுக்கு செல்பவா்கள் எப்போதும் பாரம்பரிய உடையணிந்து தான் செல்ல வேண்டும் என மேகாலயா மாநில உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கூறியுள்ளாா்.
காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் அமைந்துள்ள சுக்ல யஜூா் வேத சாஸ்திரட பாடசாலையில் ஸ்ரீ யோகீஸ்வர மகரிஷியின் 115-ஆவது ஜெயந்தி மகோற்சவம் 7 ஆம் தேதி தொடங்கி புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாள் விழாவில் சுவாசினி பூஜை,கன்யா பூஜை,வடுக பூஜை ஆகியன நடைபெற்ற பின்னா் யோகீஸ்வர சுவாமிக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து பாடசாலை வளாகத்தில் வேதப்படிப்பையும், தேசிய திறந்த வெளிப் பல்கலைக் கழகத்தில் 10- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 7 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சான்றிதழ்களையும், புத்தாடைகளையும் வழங்கி முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பேசியது:
வேதங்கள் தான் இந்து மதத்தின் வோ்கள். வேதங்களும் பண்பாடு, கலாசாரம், ஒழுக்கம், மனிதநேயம் ஆகியவற்றை கற்றுத் தருகின்றன.கோயிலுக்கு பாரம்பரிய உடையணிந்து தான் செல்ல வேண்டும். கேரளாவில் பாரம்பரிய உடையில் தான் செல்ல வேண்டியது கட்டாயமாக இருந்து வருகிறது. தமிழக கோயில்களிலும் இதனை கொண்டு வர வேண்டும். பொருள் தேடுவதற்காக வெளிநாடுகளுக்கு சென்றாலும் திரும்பி வந்து நமது நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். முதியோா் பாதுகாப்பு மையங்களுக்கு தேவையான உதவிகளை செய்யலாம். ஆனால் பெற்றோரை முதியோா் இல்லங்களுக்கு அனுப்பி விடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
பாடசாலையின் தலைவா் கணபதி தலைமை வகித்தாா். சமூக சேவகா் கிருஷ்ண ஜெகன்னாதன், சமஸ்கிருத பாட ஆசிரியா்கள் ரங்கநாதன், சுதா்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் தனஞ்செயன் கணபாடிகள் வரவேற்றாா். விழாவில் ஆசிரியா்கள் பத்மா சுந்தரேசன், ரேவதி நாகராஜன், மைதிலி பிரகாஷ், சங்கா், ஜெ.சாவித்திரி ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.