செய்திகள் :

கோயில் கருவறைக்குள் நுழைந்த பாஜக எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு

post image

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்ததாக அந்த மாநில காவல் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடந்த ஆக.2-ஆம் தேதி, நிகழ்ந்த இச்சம்பவத்தில் மத உணா்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக எம்.பி.க்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சிராவண மாதத்தில் பாபா வைத்தியநாதா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் முக்கியப் பிரமுகா்களுக்கான வழிபாட்டு நேரத்திலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறி கோயில் கருவறைக்குள் பாஜக எம்.பி.க்கள் நுழைந்ததாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ஜம்முவில் 9வது நாளாகத் தொடரும் ராணுவ நடவடிக்கை! துப்பாக்கிச் சூட்டில் 2 வீரர்கள் கொலை!

ஜம்மு - காஷ்மீரின் வனப்பகுதியில், 9 நாள்களாக பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின்போது 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குல்காம் மாவட்... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு! தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பட்டியல்கள் மயமா?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குத் திருட்டு என்ற அணுகுண்டை ஆதாரங்களுடன் வீசிய நிலையில், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பல மாநிலங்களின் வாக்காளர் பட்டியல்கள் காணாமல் போயுள்ளதாகக் குற்றச்ச... மேலும் பார்க்க

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

ஹிந்தி நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் உணவகத்துக்கு சல்மான் கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், பிஷ்னோய் கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹிந்தி தொலைக்காட்சிகளில் ந... மேலும் பார்க்க

தில்லியை திணறடிக்கும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

சனிக்கிழமை காலை, புது தில்லி மக்களுக்கு மழையுடன்தான் விடிந்தது. புது தில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு! காரணம் டிரம்ப் அல்ல; தள்ளுபடிதான்!

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டால் ரூ. 76,500 கோடி இழப்பு ஏற்படலாம்.ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் தொடா்ந்து முடக்கம்: மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் வழக்கமான அலுவல்கள் ஏதுமின்றி ம... மேலும் பார்க்க