செய்திகள் :

கோவை திடீரென சாய்ந்த மின் கம்பம் - கண் இமைக்கும் நொடியில் யானைக்கு நடந்த சோகம்

post image

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையடிவார சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை, காட்டு மாடு, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும். இவற்றில் யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் உலா வருவது வழக்கம். அங்கு தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பேபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில், நேற்று இரவு 25 மதிக்கத்தக்க ஆண் யானை சென்றுள்ளது.

யானை மீது மின் கம்பம்

அந்த யானை  நாகராஜன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. அண்மையில் அந்தப் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை அங்கு சென்ற அந்த யானை மின் கம்பத்தை முட்டித் தள்ளியது. இதில் மின் கம்பம் யானை மீது விழுந்து, மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தோட்டத்தின் உரிமையாளர் நாகராஜன் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

யானை

அந்தத் தகவலின் அடிப்படையில், வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே பகுதியில் தான் கடந்த வாரம் ரோலக்ஸ் என்று பெயரிடப்பட்ட ஆண் காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

முதல் கட்ட விசாரணையில் அந்த இடத்தில் மின்வேலி இருந்ததால் யானை அதை கடந்து செல்ல முயற்சி செய்துள்ளது. கடந்த சில நாள்களாக கோவையில் கனமழை பெய்து வந்ததால் அப்பகுதி சேறும், சகதியுமாக இருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக யானை மின்கம்பத்தை முட்டி, விழுந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.

உயிரிழந்த யானை

உயிரிழந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆனைமலை பருத்தியூர் அருகே வயது முதிர்ந்த பெண் யானை ஒன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது.

``சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு'' - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

தூய்மைப் பணியாளர்கள் சென்னையில் கடந்த ஆகஸ்ட்டில் தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரி ரிப்பன் மாளிகைக்கு வெளியே இரண்டு வாரம் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.13 நாள்களாகப் போராட்டக்காரர்களை அலட்சியப்ப... மேலும் பார்க்க

`2.5 மில்லியன் இந்தியர்களின் பெருமூச்சு' - கஃபாலா சட்டத்தை ரத்து செய்த சவூதி இளவரசர்!

வெளிநாட்டு மோகம்விரைவில் பணக்காரனாக வேண்டும், கூடுதலாக சம்பாதிக்க வேண்டும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக 1970, 80, 90-களில் வெளிநாட்டுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.குறிப்பாக வளைகுடா நாடுகளான ... மேலும் பார்க்க

ரூ.13,000 கோடி கடன் மோசடி: வைர வியாபாரி மெஹுல் சோக்சிக்காக சகல வசதியுடன் தயாராக இருக்கும் சிறை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திரும்ப கொடுக்காமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர் வெவ்வேறு நாடுக... மேலும் பார்க்க

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு‌ அமெரிக்கா தடை: பாதிக்கும் ரிலையன்ஸ்; இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி'இனி இந்தியா மெல்ல மெல்ல ரஷ்ய எண்ணெய் வாங்குவதைத் குறைக்கும்' - இது கடந்த இரண்டு - மூன்று நாள்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கும் ஒன்று.இன்னொரு பக... மேலும் பார்க்க

வம்பிழுத்த ‘இன்பமான’ எம்.பி; வறுத்தெடுத்த தலைமை டு இடத்தை மாற்றிய கதைசொல்லியார்! | கழுகார் அப்டேட்ஸ்

கடுப்பில் சூரியக் கட்சி நிர்வாகிகள்!சுயநலத்தால் தொகுதியைத் தாரைவார்க்கும் ‘சாமி’ சீனியர்..?தேர்தல் நேர உள்ளடிகள், பின்னலாடை மாவட்டச் சூரியக் கட்சிக்குள் தற்போதே சூட்டைக் கிளப்பியிருக்கிறது. அந்த மாவட்... மேலும் பார்க்க

`இப்போதுகூட வேகமாக நடக்கவில்லை'- கொள்முதல் அலட்சியம்; தேங்கிக் கிடக்கும் நெல்; துயரில் விவசாயிகள்

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். குறித்த நேரத்தில் மேட்டூர் திறக்கப்பட்டது, போதுமான அளவில் விவசாயத்திற்... மேலும் பார்க்க