செய்திகள் :

`சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்த வேண்டும்' - ராமதாஸ்

post image

தமிழ்நாடு சட்டக்கல்லூரிகளில் ஆசிரியர் பணியில் ஆள் சேர்பதற்கான போட்டித்தேர்வை உடனே நடத்த வேண்டும் என்றும், சட்டக் கல்லூரி பேராசிரியர் ஆவதற்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டுமென்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

அவர் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் சட்டம் மற்றும் முன் சட்ட உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு 56 பேரை தேர்வு செய்வதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், நவம்பர் மாதத்தின் முதல் பாதி கடந்து விட்ட நிலையில் இன்று வரை ஆள்தேர்வுக்கான அறிவிக்கையும் வெளியிடப்படவில்லை; வயது வரம்பு குறித்த குழப்பங்களும் தீர்க்கப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான முனைவர் பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் தொடர்பான இந்த விவகாரத்தில் தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

சட்ட உதவிப் பேராசிரியர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு எனக்குத் தெரிந்த நாளில் இருந்து 57 ஆகத் தான் இருந்து வருகிறது. ஆசிரியர் பணிகளைப் பொறுத்தவரை பணியில் சேரும் ஒருவர் குறைந்து ஓராண்டு முழுமையாக பணி செய்யும் நிலையில் இருக்க வேண்டும் என்பது தான் வயது குறித்த தகுதி ஆகும். கடந்த 2014-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட சட்ட விரிவுரையாளர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வரை வயது வரம்பு 57 ஆகத் தான் இருந்தது. அது தான் சரியான அணுகுமுறை ஆகும். ஆனால், 2018-ஆம் ஆண்டு முதல் அதிகபட்ச வயது 40 ஆக குறைக்கப்பட்டு விட்டது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணிக்கு இப்போதும் அதிகபட்ச வயது 57 ஆகத் தான் இருக்கிறது. ஒரே வகையான ஆசிரியர் பணிக்கு கலை அறிவியல் துறையினருக்கு ஒரு வயது வரம்பும், சட்டக்கல்வித் துறையினருக்கு ஒரு வயது வரம்பும் நிர்ணயிப்பது முறையல்ல. அது இயற்கை நீதியும் அல்ல. உண்மையில் தமிழ்நாட்டில் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதிகபட்ச வயது 59 ஆக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கு பதிலாக 40 ஆக குறைக்கப்பட்டிருப்பதால் சட்ட உதவிப் பேராசிரியர் பணிக்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்ட பல்லாயிரம் பேரின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.

சட்ட உதவிப் பேராசிரியர் பணிக்கான அனைத்துத் தகுதிகளையும் ஒருவர் பெறுவதற்கு 30 வயதாகி விடும். அதன்பின் 10 ஆண்டுகள் மட்டுமே அவர்கள் சட்ட உதவிப் பேராசிரியர் பணிக்கு போட்டியிட முடியும். தமிழ்நாட்டில் 10 ஆண்டு இடைவெளியில் அதிகபட்சமாக இரு முறை மட்டும் தான் சட்டக்கல்லூரிக்கு உதவிப் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருவரின் வாழ்க்கையில் அரசு வேலைவாய்ப்புக்காக வெறும் இரண்டே இரண்டு வாய்ப்புகள் மட்டும் வழங்குவது சமூகநீதியும் அல்ல, சம நீதியும் அல்ல.

எனவே, சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்த வேண்டும். அரசு சட்டக்கல்லூரிகளில் சட்டம் மற்றும் முன் சட்ட உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு 56 பேரை தேர்வு செய்வதற்கான ஆள்தேர்வு அறிவிக்கையை ஏற்கனவே அறிவித்தவாறு இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்". எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

வயநாடு : `மத்திய அரசின் அறிவிப்பு மனிதாபிமானமற்ற செயல்' - கேரள வருவாய்த் துறை அமைச்சர் ராஜு

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30-ம் தேதி சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ... மேலும் பார்க்க

கிண்டி : `விக்னேஷின் இறப்பிற்கு டாக்டர்கள்தான் காரணம்' - குடும்பத்தினர் வேதனை

சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பாலாஜியை, விக்னேஸ்வரன் என்பவர் கத்தியால் குத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இதுகுறித்து ... மேலும் பார்க்க

Wayanad : `வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடர் இல்லை' - மத்திய அரசு சொல்வதென்ன?

கடந்த ஜூலை 30 - ம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் துயரத்தில் ஆழ்த்தியது. புஞ்சிரி மட்டம், முண்டகை, சூரல் மலை கிராமங்களில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 400 ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: `உள்ள நுழைய கூட முடியாது’ - வட்டாட்சியர் அலுவலகத்தில் மோசமான நிலையில் கழிவறை

திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் வந்து பார்வையிட்ட கழிவறை, மூன்றே மாதங்களில் மீண்டும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது.தற்போது இது எவ்வித பராமரிப்பின்றி மிக அசுத்தமான நிலையில் ‌தூ... மேலும் பார்க்க

எழும்பூர்: அம்பேத்கர் அரசுப் பள்ளியைச் சுற்றி இத்தனை இடர்களா... கண்டுகொள்ளுமா அரசு?!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடையேயுள்ள ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி, டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியை ஒட்டியுள்ள தண்டவாளத்... மேலும் பார்க்க

நெல்லை: சேரும் சகதியுமான சாலைகள்; நடந்து செல்வதே சாகசம்தான்... அவதியில் ராதாபுரம் மக்கள்..!

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவுக்கு உள்பட்ட ப்ரைட் நகர் பகுதியில் சுமார் 120 வீடுகள் வரை இருக்கின்றன. இந்தக் குடியிருப்பு பகுதியில் உள்ள பாதைகள் அனைத்தும், முறையாகச் சாலைகள் அமைத்துத் தரப்படாமல், ... மேலும் பார்க்க