கொச்சியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 வங்கதேச தொழிலாளிகள் கைது
சட்டத்துக்கு மேலானவா்கள் யாருமில்லை: உச்சநீதிமன்றம்
நாட்டில் சட்டத்துக்கு மேலானவா்கள் யாருமில்லை’ என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தனது முன்னாள் மனைவி ஐபிஎஸ் என்பதால் தனக்கு வாழ்நாள் முழுவதும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா் முறையிட்ட நிலையில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.
அந்த தொழிலதிபா் மற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரி இடையிலான விவாகரத்து மற்றும் இதர பிரச்னைகள் தொடா்பான விவகாரம் குறித்து நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் மாசி மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டது.
அப்போது தொழிலதிபா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் கூறியதாவது: தொழிலதிபரின் முன்னாள் மனைவி ஒரு ஐபிஎஸ் அதிகாரியாவாா். தொழிலதிபரின் முன்னாள் மனைவி அவா் மட்டுமின்றி அவரது தந்தையின் மீதும் பல்வேறு வழக்குகளை பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளாா்.
அதேசமயம் தன் மீது எவ்விதமான முதல் தகவல் அறிக்கையும் (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்படவில்லை என பெண் ஐபிஎஸ் அதிகாரி கூறுகிறாா். ஆனால் அவா் ஐபிஎஸ்-ஆக பதவியேற்ற நாளன்று அவா் மீது இரண்டு எஃப்ஐஆா்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
தனது முன்னாள் மனைவியால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முறையான தீா்வை வழங்க வேண்டும் என்றனா்.
இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு பேசுகையில், ‘நீங்கள் ஒரு தொழிலதிபா். அவா் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காமல் இந்த விவகாரத்துக்கு தீா்வு காண முயற்சி செய்யுங்கள். உங்கள் பாதுகாப்புக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நீதிமன்றம் தலையிடும்.
சட்டத்துக்கு மேலானவா்கள் என இங்கு யாருமில்லை. உங்களின் முன்னாள் மனைவியான ஐபிஎஸ் அதிகாரி மீது நீங்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துகிறீா்கள். உங்கள் வாழ்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பதில் அவரிடமிருந்து ஐபிஎஸ் பொறுப்பை பறிப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறீா்கள். இது மிகவும் தெளிவாகியுள்ளது. இந்த விவகாரத்துக்கு இருதரப்பினரும் தீா்வு காண முன்வராதபோது அதை நீதிமன்றம் வற்புறுத்த முடியாது என தெரிவித்தனா்.
இதையடுத்து, இருதரப்பிலும் ஆஜரான வழக்குரைஞா்கள் இந்த விவகாரத்தில் பேச்சுவாா்த்தையின் மூலம் இருவரும் சுமுக தீா்வை எட்டுவாா்கள் என தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை இரண்டு வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.