செய்திகள் :

சபலென்கா, பாலினி, படோசா அதிா்ச்சித் தோல்வி

post image

கத்தாா் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலாரஸின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் பௌலா படோசா, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் தொடக்கநிலை சுற்றுகளிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 6-3, 3-6, 6-7 (5/7) என்ற செட்களில், ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவால் 2-ஆவது சுற்றில் தோற்கடிக்கப்பட்டாா். போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த பாலினி 2-6, 2-6 என்ற நோ் செட்களில், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவால் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வீழ்த்தப்பட்டாா்.

9-ஆம் இடத்திலிருந்த படோசா 4-6, 3-6 என, அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவால் 2-ஆவது சுற்றில் வெளியேற்றப்பட்டாா். இதர ஆட்டங்களில், சபலென்காவை வீழ்த்திய அலெக்ஸாண்ட்ரோவா 6-4, 6-2 என பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸை சாய்த்தாா்.

உக்ரைனின் மாா்தா கொஸ்டியுக் 6-4, 6-2 என போலந்தின் மெக்தா லினெட்டை வீழ்த்த, 6-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-3, 7-5 என, 10-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டரியா கசாட்கினாவை தோற்கடித்தாா்.

5-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 7-6 (7/1), 6-2 என்ற கணக்கில் ஸ்லோவேகியாவின் ரெபெக்கா ஸ்ராம்கோவாவை வென்றாா்.

பழக்கப்பட்ட சூழல்தான் நமக்கு எதிரி: ரகுல் பிரீத் சிங்

நடிகை ரகுல் பிரீத் சிங் பழக்கப்பட்ட சூழல் நமக்கு எதிரியாக இருப்பதாகக் கூறியுள்ளார். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தமிழில் அருண் விஜய் உடன் தடையறத் தாக்க படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத்... மேலும் பார்க்க

ஸ்லோமோஷன் இல்லையென்றால் ரஜினி இல்லை: ராம் கோபால் வர்மா

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பு குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா விமர்சித்துள்ளார்.இந்தியளவில் பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா. காத்திரமான கதைகளை நேர்த்தியான பாணியில் திரையாக்கம் செய்து பாராட்டுகள... மேலும் பார்க்க

மஞ்சு வாரியரிடமே கேட்க வேண்டியதுதானே? ஆத்திரமடைந்த பார்வதி!

நடிகை பார்வதி திருவோத்து மஞ்சு வாரியர் குறித்த கேள்விக்கு காட்டமாக பதிலளித்துள்ளார்.நடிகர் பார்வதி திருவோத்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கென தனி ... மேலும் பார்க்க

பவதாரிணியின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும்: இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா தன் மகள் பவதாரிணி குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜன. 25 ஆம் தேதி இலங்கையில் காலமானார். மறைந்து ஓர... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் ஆஜரான இளையராஜா!

பாடல்கள் உரிமம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களில் பாடல்களை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியி... மேலும் பார்க்க

மாமன் இரண்டாவது போஸ்டர்!

நடிகர் சூரி மாமன் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்... மேலும் பார்க்க