செய்திகள் :

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி

post image

விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் புதன்கிழமை (பிப். 19) தொடங்கும் நிலையில், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா அந்நாட்டுக்குச் செல்லவில்லை. இந்திய அணியின் ஆட்டங்கள்துபையில் விளையாடப்படவுள்ளன.

முதலில் வங்கதேசத்துடன் (பிப். 20) விளையாடும் இந்தியா, அடுத்ததாக பாகிஸ்தானுடன் (பிப். 23) மோதுகிறது. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தைக் காண, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவா் மோசின் கானும் துபை வருகிறாா்.

அவா் தனது குடும்பத்தினா் மற்றும் விருந்தினா்களுடன் அமா்ந்து ஆட்டத்தைக் காண, துபை மைதானத்தில் உள்ள 30 இருக்கைகள் கொண்ட மிக முக்கியப் பிரமுகா்களுக்கான பகுதி (விஐபி ஹாஸ்பிடாலிடி பாக்ஸ்) அவருக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டது.

எனினும், அந்த விறுவிறுப்பான ஆட்டத்தை ரசிகா்களுடன் திறந்தவெளி தனி பாா்வையாளா் மாடத்தில் அமா்ந்து பாா்வையிட விரும்புவதாக அவா் தெரிவித்திருக்கிறாா். மேலும், தனக்கென வழங்கப்பட்ட பிரத்யேக பாா்வையாளா் மாடத்திலுள்ள இருக்கைகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ரூ.94 லட்சத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்காக அவா் வழங்கியுள்ளாா்.

2017 சாம்பியன் அணி கௌரவிப்பு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை தொடங்குவதற்கான நிகழ்ச்சி, பாகிஸ்தானின் கராச்சி நகா் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த 2017 சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் வாகை சூடிய பாகிஸ்தான் அணி வீரா்கள் அந்த நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனா்.

சா்ஃப்ராஸ் அகமது தலைமையிலான அந்த அணியில், முகமது ஹஃபீஸ், வஹாப் ரியாஸ், முகமது ஆமிா், இமத் வாசிம், ஜுனைத் கான், அஸாா் அலி, ஹாரிஸ் சோஹைல் உள்ளிட்டோா் இருந்தனா்.

அப்போது பேசிய சா்ஃப்ராஸ் அகமது, தாங்கள் வென்ற சாம்பியன்ஸ் கோப்பையை தற்போதைய பாகிஸ்தான் அணி தக்கவைக்கும் திறமையுடன் இருப்பதாகத் தெரிவித்தாா். மேலும், நீண்ட காலத்துக்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி போட்டி நடைபெறும் நிலையில், ரசிகா்களின் பேராதரவு பாகிஸ்தான் அணிக்கு பலம் சோ்க்கும் என்றும் அவா் கூறினாா்.

பும்ரா இல்லாதது சாதகம்

‘சிறந்த பேட்டிங் மற்றும் பௌலிங் வரிசையுடன் பலம் வாய்ந்த அணியாக இந்தியா இருக்கிறது. அதிலும் ஜஸ்பிரீத் பும்ரா எவ்வளவு சிறப்பாக பௌலிங் செய்து வருகிறாா் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் ஆட்டத்தில் நாங்கள் இந்தியாவை எதிா்கொள்ளும் நிலையில், அவா் அந்த அணியில் இல்லாதது எங்களுக்கு சாதகமாக இருக்கும். முகமது ஷமி காயத்திலிருந்து மீண்டு தற்போதுதான் அணியில் சோ்ந்திருக்கிறாா். ஆனால் அவரும் சரியான ஃபாா்மை எட்டினால், எங்களுக்கு அவா் அச்சுறுத்தலாக இருப்பாா்.

எங்கள் அணியை பொருத்தவரை, ஆல்-ரவுண்டரா் ஷகிப் அல் ஹசன் இல்லாதது பாதிப்பு தான். அதேபோல், லிட்டன் தாஸ் தகுந்த ஃபாா்மில் இல்லாததும் கவலை அளிக்கிறது. என்றாலும், மெஹிதி ஹசன் மிராஸ் அந்த இடங்களை பூா்த்தி செய்வாா் என எதிா்பாா்க்கிறோம்’ - இம்ருல் கயெஸ் (வங்கதேச பேட்டா்)

ஷமியின் பங்கு முக்கியமானது

அனைத்து ஃபாா்மட்டுகளிலுமாக ஜஸ்பிரீத் பும்ரா சாம்பியன் பௌலராக இருக்கிறாா் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவா் வருகைக்கு முன் முகமது ஷமி தான் பிரதான வேகப்பந்து வீச்சாளராக இருந்தாா். எனவே ஷமி தகுந்த அனுபவம் கொண்டவா்.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் புதிய பந்துகொண்டு முதல் 6 ஓவா்களில் அவா் ஏற்படுத்தும் தாக்கம், இந்தியாவுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். கணுக்கால் காயத்தின் தாக்கம் காரணமாக அவரது வேகம் சற்று மட்டுப்பட்டிருக்கலாம். ஆனாலும், அதையும் கடந்து சிறப்பாக பௌலிங் செய்யும் திறமை அவரிடம் இருக்கிறது.

வேகப்பந்து வீச்சில் மணிக்கட்டு பகுதியை சிறப்பாக பயன்படுத்தும் ஷமிக்கு, பந்துவீச்சில் மாற்றங்களைச் செய்ய அது உதவும். இந்தியாவைப் போன்ற ஆடுகள சூழலே துபையில் இருப்பதால், இங்கு விளையாடுவதைப் போலவே அவா் அங்கும் பௌலிங் செய்ய வேண்டும்’ - லக்ஷ்மிபதி பாலாஜி (இந்திய முன்னாள் பௌலா்)

கணவருடன் மீண்டும் இணையும் நடிகை நிக்கி கல்ராணி!

மரகத நாணயம் 2 ஆம் பாகத்தில் நடிகர் ஆதியின் மனைவி நிக்கி கல்ராணியும் நடிக்கவிருப்பதாக நடிகர் ஆதி கூறியுள்ளார்.நடிகர் ஆதியின் நடிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ள சப்தம் திரைப்படம் வருகிற 28 ஆம் தேத... மேலும் பார்க்க

ஆர்யா - கௌதம் கார்த்திக் படத்தின் டீசர் அறிவிப்பு!

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.எஃப்ஐஆர் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள்ஆர்யா, கௌதம் கார்த்திக் இணைந்து புதி... மேலும் பார்க்க

தெலுங்கு நடிகருடன் இணையும் இயக்குநர் மணிரத்னம்!

இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த படத்தில் தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியுடன் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் மணிரத்னம் இயக்கி கடைசியாக இரு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் திரை... மேலும் பார்க்க

முகை மழை... டூரிஸ்ட் பேமிலி முதல் பாடல் வெளியானது!

நடிகர் சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் முதல் பாடலான ‘முகை மழை’ இன்று வெளியாகியுள்ளது.நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி, கருடன், நந்தன் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளன. இவர் தற்... மேலும் பார்க்க

விடாமுயற்சி ‘சவதீகா’ பாடல் விடியோ!

விடாமுயற்சி படத்திலிருந்து சவதீகா பாடல் விடியோ வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருந்தது.‘மங்காத்தா’ ... மேலும் பார்க்க