செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டால்..? ரூ.500 கோடி இழப்பைச் சந்திக்கும் பிசிபி!

post image

சாம்பியன்ஸ் டிராபி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான இழப்பை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அரசிடம் இருந்து அனுமதி பெறாத பிசிசிஐ, 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தானுக்குச் செல்லப் போவதில்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், போட்டி நடத்துவதில் உறுதியாக உள்ளது. இந்திய அணிக்கான போட்டிகளை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரத்தில் ஹைபிரிட் மாடலில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பிசிபி, பிசிசிஐயின் நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு ஐசிசிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இவ்விரு அணிகளும் 2012-2013 ஆம் ஆண்டில் கடைசியாக இருதரப்பு போட்டிகளில் விளையாடின. அதன்பின்னர் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பைகளில் மட்டும் விளையாடி வருகின்றன. 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் நடத்தியது. ஆனாலும், இந்தியாவுக்கான போட்டிகள் இலங்கையில் நடத்தப்பட்டன.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி, கராச்சி, லாகூர் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் கராச்சி, ராவல்பிண்டி மற்றும் லாகூர் ஆகிய மூன்று மைதானங்களை அதிக பொருள் செலவில் மேம்படுத்தியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து, சாம்பியன்ஸ் டிராபி பாதிக்கப்பட்டால் அது ஐசிசியின் கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது முடிவைத் திரும்பப் பெற்றால், அதன் ஐசிசி நிதி கணிசமாகக் குறைக்கப்படலாம். போட்டியை நடத்துவதைத் தவிர்த்து போட்டியை வேறு இடத்துக்கு மாற்றினால் 65 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.500 கோடி) இழக்க நேரிடும்.

சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களை வெற்றிகரமாக நடத்தி, சாம்பியன்ஸ் டிராபிக்கும் உறுதியளித்துள்ளதால், நாட்டில் பாதுகாப்பு பிரச்னை இல்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி இன்னும் பதிலளிக்கவில்லை. மேலும், பங்கேற்கும் அணிகளுடனான அட்டவணை குறித்து விவாதித்து வருகிறது. பிசிபியும் நாட்டிற்கு வெளியே ஐக்கிய அரபு எமிரேட்ஸில்கூட நடத்த விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து சந்தேகப்படுவோரின் கவனத்துக்கு... ரவி சாஸ்திரி கூறியதென்ன?

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார்.இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி கடந்த சில மாதங்களாக... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட்டை பாதுகாப்பான கைகளில் ஒப்படைத்த ரோஹித், விராட்; முன்னாள் வீரர் பதிவு!

டி20 போட்டிகளில் இளம் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதை நினைத்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.டி20 உ... மேலும் பார்க்க

இலங்கை, பாகிஸ்தான் தொடர்களிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் விலகல்!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் தொடர்களிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி விலகியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணி அதன் சொந்த மண்ணில் இல... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பையில் 300* ரன்கள் விளாசிய மஹிபால் லோம்ரோர்!

ரஞ்சிக் கோப்பையில் உத்தரகண்ட் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் இடதுகை ஆட்டக்காரர் மஹிபால் லோம்ரோர் 360 பந்துகளில் 300* ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.2024-2025 ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பை ப... மேலும் பார்க்க

வாய்ப்பளித்த சூர்யகுமார் யாதவ்; நம்பிக்கையை காப்பாற்றிய திலக் வர்மா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர் திலக் வர்மா மூன்றாவது வீரராக களமிறங்கி சதமடித்து அசத்தினார்.இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொ... மேலும் பார்க்க

மேக்ஸ்வெல் அதிரடி: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி பிரிஸ்பேனின் காபா திடலில... மேலும் பார்க்க