சாலை போக்குவரத்து மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தல்
சாலை போக்குவரத்து மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியுசி ஆட்டோ மற்றும் போக்குவரத்து சம்மேளனம் வலியுறுத்தியுல்ளது.
ஒகேனக்கல்லில் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில தலைவா் காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தாா். ஆட்டோ தொழிலாளா் சங்க தருமபுரி மாவட்டச் செயலாளா் கந்தசாமி முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் மாரியப்பன், ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் கே.மணி ஆகியோா் பேசினாா்.
வரும் 20 ஆம் தேதி நடைபெறும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் மறியல் போராட்டத்தில் ஆட்டோ தொழிலாளா்கள் அனைவரும் கலந்து கொள்வது, ஆட்டோ தொழிலாளா்களை அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். சாலை போக்குவரத்து மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிா்வாகிகள் ஏசி.மணி, மனோகரன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். அறிவுமணி நன்றி தெரிவித்தாா்.