செய்திகள் :

சிந்துவெளி: முதல்வர் வெளியிட்ட 3 முக்கிய அறிவிப்புகள்!

post image

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.5) தொடக்கி வைத்து 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழாவில் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆற்றிய உரை:

தமிழ்ப் பண்பாட்டை பேணிப் பாதுகாப்பதுதான் தமிழ்நாடு அரசின் தலையாய கடமை என்று உலகுக்கு உணர்த்தும் வகையில், மூன்று முக்கியமான அறிவிப்புகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் வெளியிட விரும்புகிறேன்.

* செழித்து வளர்ந்த சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை இன்னும் நம்மால் தெளிவாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளிப் புதிர் பற்றி உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உள்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையைக் கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துக்கொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்பது முத்தான முதல் அறிவிப்பு!

சிந்துவெளி பண்பாடு குறித்து தொடர் ஆராய்ச்சிகளை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் வகையில் தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஓர் ஆய்வு இருக்கை அமைக்க 2 கோடி ரூபாய் நல்கை வழங்கப்படும் என்பது இரண்டாவது அறிவிப்பு!

தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி, கல்வெட்டியல் ஆய்வாளர்கள், நாணயவியல் வல்லுநர்கள் ஆகியோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இது மூன்றாவது அறிவிப்பு.

இந்த மூன்று அறிவிப்புகளும் இந்தத் துறை ஆய்வுகளுக்கு வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரம்: போதைப் பொருள் கடத்திய நபர் கைது!

மகாராஷ்டிர மாநிலத்தில் போதைப் பொருள் கடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் இன்று (ஜன.8) தெரிவித்துள்ளனர்.தாணே மாவட்டத்தில் அம்மாநில காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கட... மேலும் பார்க்க

கம்யூனிசம் குறித்த ஆ.ராஜா பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்

“கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கொள்கை தோற்றுப் போய் விட்டது” என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்ட... மேலும் பார்க்க

பொள்ளாச்சி சம்பவம் அதிமுகவினரால் நடத்தப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்

பொள்ளாச்சி சம்பவம் அதிமுகவினரால் நடத்தப்பட்டது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார்.அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எம்எல்... மேலும் பார்க்க

9 ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து! சிறுவன் கைது!

ஒடிசா மாநிலம் பாலாசோரில் 9 ஆம் வகுப்பு மாணவனைக் கத்தியால் குத்திய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.அம்மாநிலத்தின் தெமூரியா கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் மண்டல் எனும் சிறுவன் அப்பகுதியிலுள்ள பள்ளிக்கூடத்தி... மேலும் பார்க்க

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அண்ணன் கோபாலன் மறைவு: முதல்வர் இரங்கல்

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அண்ணன் .இல.கோபாலன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அண்ணன் இல.கோபாலன் பு... மேலும் பார்க்க

இஸ்ரோ பணி அனைவரது கூட்டுப் பணி: வி.நாராயணன்

இஸ்ரோ பணி என்பது தனிப்பட்ட பணி அல்ல, அனைவருடைய கூட்டுப் பணி என இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் தெரிவித்தார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக தமிழகத்தை சேர்... மேலும் பார்க்க