செய்திகள் :

சின்ன திரை நடிகர் ஸ்ரீதர் காலமானார்!

post image

பிரபல சின்ன திரை நடிகர் ஸ்ரீதர் மாரடைப்பால் நேற்று(ஏப். 5) காலமானார்.

சென்னை தியாகராய நகரில் தனது குடும்பத்துடன் வசிந்து வந்த ஸ்ரீதருக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

சின்ன திரையில் கே. பாலச்சந்தர் இயக்கிய சஹானா தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீதர். அண்மையில், வள்ளியின் வேலன் என்ற தொடரில் நடித்து வந்தார். முன்னதாக, தாமரை, சித்தி - 2 உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் ஒய்.ஜி. மகேந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். பெரிய திரையில் அழியாத கோலங்கள், விஐபி, ராஜவம்சம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ஸ்ரீதர் மறைவு திரையுரலக பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நானியின் ஹிட் 3 படத்தின் 2-ஆவது பாடல்!

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள ஹிட் 3 படத்தின் 2ஆவது பாடல் வெளியானது. நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான த... மேலும் பார்க்க

பிரசாந்த் நீல் படத்தில் ஜூனியர் என்டிஆரின் படப்பிடிப்பு தேதி அறிவிப்பு!

பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் ஜூனியர் என்டிஆர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்... மேலும் பார்க்க

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2025 (கும்பம்)

தமிழ்ப் புத்தாண்டு பலன்களைதினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)கிரகநிலை:ராசியில் சனி - தன வா... மேலும் பார்க்க

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2025 (மீனம்)

தமிழ்ப் புத்தாண்டு பலன்களைதினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)கிரகநிலை:ராசியில் ராகு, சுக்ரன்(வ), பு... மேலும் பார்க்க

நீதிபதி மகனைத் தாக்கிய வழக்கு: தர்ஷனுக்கு ஜாமீன்!

நடிகர் தர்ஷனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.தமிழ் திரைப்பட நடிகா் தா்ஷன், சென்னை முகப்பேரில் குடும்பத்துடன் வசிக்கிறாா். இவா் ‘கூகுள் குட்டப்பா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளாா். மேல... மேலும் பார்க்க

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2025 (மகரம்)

தமிழ்ப் புத்தாண்டு பலன்களைதினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.மகரம் (உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்)கிரகநிலை:தன வாக்கு குடும்ப ஸ்... மேலும் பார்க்க