Wayanad: நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசு - எதிர்க்கட்சி...
சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 4.42 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு
சென்னை: இரண்டு நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 4.42 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக, கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களின் வழியே, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக 6 லட்சத்து 85 ஆயிரத்து 513 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.
குறிப்பாக, பெயா் சோ்ப்புக்காக மட்டும் 4 லட்சத்து 42 ஆயிரத்து 35 விண்ணப்பங்களும், பட்டியலில் திருத்தங்கள் கோரி 44 ஆயிரத்து 218 விண்ணப்பங்களும், சட்டப் பேரவைத் தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றம் செய்ய 1 லட்சத்து 98 ஆயிரத்து 931 விண்ணப்பங்களும் அளிக்கப்பட்டதாக அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.