செய்திகள் :

Manipur: `பிடிவாதத்தை கைவிட்டு மோடி மணிப்பூர் செல்ல வேண்டும்" - ப. சிதம்பரம் சொல்வதென்ன?

post image
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது.

இம்பால் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள சில எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. வாகனங்கள் எல்லாம் எரிக்கப்பட்டிருக்கிறது. வன்முறையைக் கட்டுப்படுத்தக் காவல்துறை கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தி இருக்கின்றனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் சிலர் காயமடைந்திருக்கின்றனர். மீண்டும் மணிப்பூர் கலவரப் பூமியாக மாறி இருக்கிறது.

மத்திய அரசு ராணுவத்தினரை மணிப்பூருக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்நிலையில் பிடிவாதத்தைக் கைவிட்டு பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும் என்று ப. சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கிறது. அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், " பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும்.

மணிப்பூர் மக்களிடம் உரையாடி, அவர்களின் குறை, விருப்பங்களை கேட்டறிய வேண்டும். 5,000 துணை ராணுவத்தினரை அனுப்புவது மணிப்பூர் நெருக்கடிக்கு தீர்வாகாது. நெருக்கடிக்கு முதல்வர் பிரேன் சிங்தான் காரணம் என்பதை ஒப்புக்கொண்டு அவரை நீக்கவேண்டும்" என்று ப. சிதம்பரம் பதிவிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Indira Gandhi:``என் பாட்டியிடமிருந்துதான் இதைக் கற்றேன்..." - ராகுல் காந்தி பகிர்ந்த செய்தி

நேருவின் மகள் என்ற அடையாளத்தைக் கடந்து, இந்தியாவின் இரும்புப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் இந்திரா காந்தி.உலகின் இரண்டாவது பெண் பிரதமர், இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பிறந்த நாளா... மேலும் பார்க்க

Wayanad: நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசு - எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு

நாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு பேரழிவு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்தும் ஆராத ரணமாக இருக்கிறது. உறவுகளையும் உடமைகளையும் கண்முன்னே நிலச்சரிவில் பறிகொடுத்து தவிக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உரிய மறுவா... மேலும் பார்க்க

Caste Census: `UPA அரசு செயல்படுத்தாதது தவறு' - சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல்

காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக, மத்திய அரசை வலியுறுத்தி வரும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று சாதிவாரி கணக்கெடுப்பு (Caste Census). நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிர... மேலும் பார்க்க

Vijay: TVK - ADMK கூட்டணி என வதந்தி கிளப்பியது யார்?

தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவோடு கூட்டணி இல்லை என தவெக பொதுச் செயலாளர் ஆனந்த். அந்த அறிக்கை வெளியிட்டதன் பின்னணி என்ன என்பதை அலசுகிறது இந்த வீடியோ. மேலும் பார்க்க