செய்திகள் :

பிக் பாஸ் 8: ஆண்கள் அணியில் சந்தோஷம் மட்டும்தான்! புகழ்ந்த அன்ஷிதா

post image

பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் அணியில் இருந்தது குறித்து ஆர்.ஜே. ஆனந்தியிடம் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை அன்ஷிதா. இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 6வது வாரத்தை எட்டியுள்ளது. வாரத்தின் தொடக்கத்தில் ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் பெண்கள் அணிக்கும் பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கும் மாறுவர்.

இதற்கான ஆலோசனை பிக் பாஸ் வீட்டில் நடைபெற்று வந்தது. இதில் ஆண்கள் அணிப்பக்கம் செல்ல ஆர்.ஜே. ஆனந்தி, தர்ஷிகா ஆகியோர் ஆர்வம் காட்டினர். இதற்கான காரணமாக, தான் ஆண்கள் அணியில் யாரிடமும் நெருக்கமாக இல்லை, அவர்கள் பக்கம் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது என்பது போன்ற கருத்துகளைக் கூறினர்.

இந்நிலையில் கடந்த வாரம் ஆண்கள் அணிப்பக்கம் இருந்த அவர், ஆர்.ஜே. ஆனந்தியிடம் ஆண்கள் அணி குறித்து பேசியுள்ளார்.

''ஒரு உண்மையை சொல்லட்டுமா? ஆண்கள் அணிப்பக்கம் எந்தவொரு வெடியும் இல்லை. அவர்களும் சாதாரணமானவர்களே. ஏதாவது கவலை இருந்தால் அங்கு வந்து உட்கார்ந்துகொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் அங்கு எனக்கு கவலையே ஏற்படவில்லை.

அங்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். தீபக் உடன் நான் அவ்வளவு பேசுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால், இது எல்லாமே நடந்தது.

அதேபோன்று அவர்கள் எனக்கும் என் கருத்துகளுக்கும் இடம் கொடுத்தனர். உனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் சொல்லலாம் என சுதந்திரம் கொடுத்தனர்'' எனக் கூறுகிறார்.

பெண்கள் அணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆண்கள் அணிக்கு எதிரானவராக இருந்தாலும் ஆண்கள் அணியில் இருந்தது குறித்து மிகவும் நேர்மையான கருத்துகளை அன்ஷிதா முன்வைத்துள்ளார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: வி.ஜே. விஷாலைத் தோற்கடித்து கேப்டனானார் மஞ்சரி!

எல்ஐசி வலைதளத்தின் முதன்மை மொழி மாற்றம்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

எல்ஐசி இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் முதன்மை மொழி ஹிந்தியாக மாற்றப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.www.licindia.in என்ற எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின்... மேலும் பார்க்க

இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் ம... மேலும் பார்க்க

தலித் எழில்மலை மருமகன் காமராஜ் கொலை: பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சா் தலித் எழில்மலை மருமகன் காமராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு.சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சா் தலித் எழில்மலை மருமகன் காமராஜ் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட கல்பனா என்ற... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.வருகின்ற நவ. 23ஆம் தேதி உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த... மேலும் பார்க்க

எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்க நிபந்தனை!

சென்னை: மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருதை டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.எம்.எஸ். சுப்புலட்சு... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் இன்று இலவச அனுமதி!

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இன்று (நவ. 19) இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருட்டு பாறை, அர்ஜுனன் தபசு, கடற்கரை கோய... மேலும் பார்க்க