பெங்களூர் வரை ரோடு மோசம்! Goa Ride Day 01 | Chennai to Davanagere | Royal Enfiel...
மாமல்லபுரத்தில் இன்று இலவச அனுமதி!
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இன்று (நவ. 19) இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருட்டு பாறை, அர்ஜுனன் தபசு, கடற்கரை கோயில், ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், புலிகுகை, ஆகியவற்றை கட்டணமில்லாமல் சுற்றிப் பார்க்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில், உலக பாரம்பரிய வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.19) செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், தொல்லியல் துறையின் பராமரிப்பில் அமைந்துள்ள சிற்பங்களை கட்டணமின்றி பார்வையிடலாம்.
கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, கிருஷ்ண மண்டபம் மற்றும் வெண்ணைய் உருண்டை பாறை உள்ளிட்ட குடவரை சிற்ப வளாகங்களில், சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.