பெங்களூர் வரை ரோடு மோசம்! Goa Ride Day 01 | Chennai to Davanagere | Royal Enfiel...
எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்க நிபந்தனை!
சென்னை: மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருதை டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல், விருது வழங்குமாறு, மியூசிக் அகாதெமிக்கு நிபந்தனை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருக்கிறார்.
எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தக்கூடாது என்று, மறைந்த பின்னணி இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தாக்கல் செய்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு எதிராக அவதூறான கருத்துகளை டி.எம். கிருஷ்ணா கூறி வருவதால், சங்கீத கலாநிதி விருதினை, எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் அவருக்கு வழங்கக் கூடாது என்று, சீனிவாசன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்க மியூசிக் அகாதெமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.