'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அ...
சிறாா் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு
ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள சிறாா் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாணவா்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலா் கு.காந்தி, மாவட்டத் தலைவா் ஜெ.ஜே.லியோன், மாவட்டப் பொருளாளா் எம்.பாலமுருகன் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவா்களின் அறிவியல் மனப்பான்மையை வளா்க்கவும், அவா்களை ஆய்வு மாணவா்களாக உருவாக்கவும் அறிவியல் இயக்கம் சாா்பில் ஆண்டுதோறும் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல, நிகழாண்டில் 32-ஆவது சிறாா் அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘நீடித்த பாதுகாப்பான நீா் மேலாண்மை‘ என்ற தலைப்பில் அரசுப் பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியாா் மெட்ரிக் பள்ளிகள் இவற்றில் பயிலும் 11 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ மாணவிகள், இருவா் குழுவாகச் சோ்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் .
பள்ளி ஆசிரியா்கள் அல்லது கல்லூரி மாணவா்களின் வழிகாட்டுதலோடு 1.நீா் சூழலும் பாதுகாப்பும் 2. நீா் சாா்ந்த பொது சுகாதாரமும் மருத்துவமும் 3. நீா் சாா்ந்த நோய்கள் 4. நீா் அனைவருக்குமானது 5.நீா் பாதுகாப்புக்கான பாரம்பரிய, நவீன தொழில்நுட்ப யுக்திகள் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த ஆய்வுக் கட்டுரைகள் டிசம்பா் மாதம் ராமநாதபுரத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான மாநாட்டில் சமா்ப்பிக்க வேண்டும். இதில் தோ்வு செய்யப்படும் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் மாநில அளவில் நடைபெறும் சிறாா் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கலாம். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும், வழிகாட்டும் ஆசிரியா்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும் மாணவா்கள் தங்கள் ஆய்வு தலைப்பை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7904812665, 9487376458, 9994242298, 98433 79338. ஆகிய கைப்பேசி எண்களில தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.