சிறுத்தை, புலியுடன் நேரில் சண்டையிட்டு தப்பிப் பிழைத்த இருவர்... மருத்துவமனையில் சிகிச்சை
வனப்பகுதிக்கு அருகில் வசித்தால் சிறுத்தை, புலி போன்ற வன விலங்குகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். அத்துடன், குடியிருப்பு பகுதிக்குள் வந்து நாய், ஆடு, மாடுகளை இழுத்துச் செல்வதும் வழக்கம்.
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் அருகில் உள்ள தொண்டாலி என்ற கிராமத்தில் வசிப்பவர் ஆசிஷ் மகாஜன்(55). இவர் தனது வீட்டில் ஆசையாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
நேற்று இரவு இவர்கள் குடும்பத்தினர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென நாய் குரைத்தது. சத்தம் கேட்டு உடனே ஆசிஷ் வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தார். அங்கு நாயை நோக்கி ஒரு சிறுத்தை சென்று கொண்டிருந்தது. ஆசிஷை பார்த்ததும் சிறுத்தை அவரை தாக்க வந்தது.

அதற்குள் உறங்கிக் கொண்டிருந்த ஆசிஷ் மனைவியும் எழுந்து ஓடிவந்தார். அவர் சிறுத்தையை பார்த்ததும் வீட்டிற்குள் சென்று உள்ளே இருந்த ஈட்டி ஒன்றை எடுத்து வந்து தனது கணவனிடம் கொடுத்தார். ஈட்டியின் துணையோடு ஆசிஷ் சிறுத்தை மீது பாய்ந்து 15 நிமிடம் சண்டையிட்டார். இதில் ஆசிஷ் ஈட்டியால் சிறுத்தையின் கழுத்து, மார்பு பகுதியில் குத்தினார். சண்டையில் ஆசிஷ்க்கும், சிறுத்தைக்கும் படுகாயம் ஏற்பட்டது.
மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். சிறுத்தை சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனது. ஆனால் ஆசிஷ் தப்பித்துக்கொண்டார். அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். வனத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் சென்றனர். பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். இறந்தது இரண்டு வயது பெண் சிறுத்தையாகும்.
புலியை தாக்கி ஹீரோவானவர்
மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூரில் நந்த்காவ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோவர்தன் டாங்கே(42). இவர் தனது தோட்டத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அவர் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சியபோது அங்கு ஒரு புலி வந்தது. அந்த புலி டாங்கே மீது பாய்ந்து தாக்கியது.

டாங்கேயும் பயப்படாமல் 10 நிமிடம் புலியுடன் சேர்ந்து போராடினார். கடைசியில் தனது கிணற்றுக்குள் டாங்கே இறங்கி தனது உயிரை பாதுகாத்துக் கொண்டார்.
புலி சம்பவ இடத்தில் இருந்து சென்றுவிட்டது. டாங்கே முகம் முழுவதும் புலியின் நக காயங்கள் இருந்தது. புலியை எதிர்த்து போராடி உயிரோடு வந்த அவரை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks