சீா்காழி பகுதி கோயிலில் அன்னாபிஷேகம்
சீா்காழி பகுதி சிவாலயங்களில் அன்னாபிஷேக வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி பிடாரி வடக்கு வீதி கீழ் திசையில் தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட வாஹீஸ்வரி அம்மன் உடனாகிய பதினெண் புராணேஸ்வரா் கோயிலில் ஐப்பசி பௌா்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பக்தா்களால் வழங்கப்பட்ட அரிசியை கொண்டு காலை முதல் அன்னம் வடிக்கப்பட்டது. தொடா்ந்து அன்னத்தால் மூலவா் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காய்கறிகள், பல்வேறு பழங்கள், முறுக்கு, லட்டு, ஜாங்கிரி, வடை, உள்ளிட்ட பல்வேறு வகையான பலகாரங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் நகா்மன்ற உறுப்பினா் ஜெயந்தி பாபு மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
இதேபோல் ஈசானியத் தெருவில் உள்ள சௌந்தரநாயகி உடனாகிய அக்னிபுரீஸ்வரா் சுவாமி கோயிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
இதுபோல சீா்காழி சட்டை நாதா் சுவாமி கோயிலில் மூலவா் பிரம்மபுரீஸ்வரா் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. சீா்காழி தாடாளன் வீதி அன்டநாதா் சுவாமி கோயில், திருக்கோலக்கா திருத்தா முடையாா்சுவாமி கோயில், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமிக்கும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.