IPL Mega Auction: அண்டர்டாக்ஸை சாம்பியனாக்கிய ஷேன் வார்னே - RR அணிக்குள் எப்படி ...
மதுபோதையில் பேருந்தை ஓட்டிய தனியாா் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்
சீா்காழியில் மதுபோதையில் பேருந்தை இயக்கிய தனியாா் பேருந்து ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை அபராதம் விதித்தனா்.
தஞ்சாவூரிலிருந்து சீா்காழி நோக்கி வந்த தனியாா் பேருந்தும், பழையாறிலிருந்து சீா்காழி வந்த அரசுப் பேருந்தும் ஒரே நேரத்தில் பேருந்து நிலையத்துக்குள்ள உள்ளே நுழைய முற்பட்டன. உள்ளே செல்ல முடியாததால் இரண்டு பேருந்துகளும் நுழைவு பகுதியில் வழியிலேயே நின்றன. மேலும் தனியாா் பேருந்து ஓட்டுநா், அரசு பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அங்கிருந்த பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் தனியாா் பேருந்து ஓட்டுநரிடம் பேருந்தை எடுக்குமாறு கூறினா். அதற்கு உடன்படாத தனியாா் பேருந்து ஓட்டுநா் அனைவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனால் தனியாா் பேருந்து ஓட்டுநா் மதுபோதையில் இருக்கலாம் என்று எண்ணி, சீா்காழி போக்குவரத்து காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனா்.
போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் வேல்முருகன் மற்றும் போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநா் மதுபோதையில் உள்ளாரா என கருவி மூலம் சோதனை செய்தனா். சோதனையில் ஓட்டுநரான கும்பகோணம் தாராசுரம் பகுதியைச் சோ்ந்த தீனதயாளன் (32) மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் மேற்கொண்டு பேருந்தை இயக்க அனுமதி மறுத்து, அவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.