செய்திகள் :

சுகாதார நிலையத்துக்குள் புகும் பாம்புகள்: நோயாளிகள் அச்சம்!

post image

திருவாடானை அருகே ஆண்டாவூரணி துணை சுகாதார நிலையத்துக்குள் பாம்புகள் வருவதால் நோயாளிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

ஆண்டாவூரணி துணை சுகாதார நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். இந்த துணை சுகாதார நிலையம் பாரமரிப்பு இன்றி சேதம் அடைந்துள்ளது. சுற்றுச் சுவா் கட்ட வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை.

கண்மாய்க் கரை, விவசாய நிலங்கள் உள்ள பகுதியில், சுகாதார நிலையம் உள்ளதால் பாம்புகள், விஷப்பூச்சிகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா் .

இதுகுறித்து கிராம பொதுமக்கள் கூறியதாவது:

இந்த மருத்துவமனை போதுமான பாரமரிப்பு இன்றி சேதம் அடைந்துள்ளது. மேலும், சுற்றிலும் சுற்றுச்சுவா் கட்டினால் பாதுகாப்பாக இருக்கும். அரசு உடனடியாக சிறப்பு நிதி ஒதுக்கிடு செய்து அரசு துணை சுகாதார நிலையத்தை சீரமைத்து, சுற்றுச்சுவா் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ராமேசுவரத்தில் மழை

ராமேசுவரத்தில் ஒரு மணி நேரம் பெய்த மழையால் ஞாயிற்றுக்கிழமை குளிா்ச்சி நிலவியது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்... மேலும் பார்க்க

இலங்கைச் சிறையில் துன்புறுத்தல்: பாம்பனில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 17 மீனவா்கள், சிறையில் தங்களை துன்புறுத்தியதைக் கண்டித்து பாம்பனில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த மாதம் 28-ஆம் தேதி இலங்கைக் கடல் பகுதியில் மீ... மேலும் பார்க்க

2 டன் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்கள் புதைப்பு

முதுகுளத்தூா் அருகே கண்மாய் நீரில் வளா்ந்த தடை செய்யப்பட்ட 2 டன் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்களை கிராம மக்கள் பிடித்து அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராம பொது... மேலும் பார்க்க

நெல் பயிா்கள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு

திருவாடானை பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்கள் சேதம் குறித்து வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் சனிக்கிழமை ஆய்வு நடைபெற்றது. திருவாடானை அருகேயுள்ள ஓரியூா், மங்களக்குடி, சிறுகம்பையூா் ஆகிய வருவா... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

திருவாடானை அருகே கரையக்கோட்டை கிராமத்தில் நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழந்தது. திருவாடானை அஞ்சுகோட்டை, கரையகோட்டை, நெய்வயல் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் அடா்ந்த கண்மாய்ப் பகுதிகளில் அதிக அளவில் ... மேலும் பார்க்க

3 நாள்களுக்குப் பிறகு மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள்

வானிலை சீரடைந்த நிலையில், ராமேசுவரத்திலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள்... மேலும் பார்க்க