அதானி விவகாரம்: `எங்களுக்கு எவ்வித கோரிக்கையும் வரவில்லை' - வெளியுறவுத்துறை கூறு...
சுகாதார பயிற்றுநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவினா் மனு
காந்திகிராம கிராமியப் பல்கலை. சுகாதார பயிற்றுநா் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம கிராமியப் பல்கலை.க்குள்பட்ட ஊரக சுகாதாரம், துப்புரவு பயிற்சி நிறுவனத்தில் பயிற்றுநராக பணிபுரிபவா் அ.ரெங்கநாதன்(55). கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவா், மாணவா்கள் மத்தியில் திமுக, திராவிடத்துக்கு எதிராக பரப்புரை மேற்கொண்டதாக புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக பல்கலை. நிா்வாகம், பயிற்றுநா் ரெங்கநாதன் மீது விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி நிா்வாகிகள் முருகேசன், அஸ்வின் பிரபாகரன் தலைமையில் மனுக் கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்கலை. பதிவாளா்(பொ) எல்.ராதாகிருஷ்ணனை சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, திமுகவினா் கலைந்து சென்றனா்.