சூரியஒளி மின் உற்பத்தி; ஆட்சியா் அழைப்பு
சூரியஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி, பசுமையான, ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்குவோம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமா் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தில், மானியம் 1கிலோ வாட்க்கு ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட்க்கு ரூ.60 ஆயிரமும், 3 கிலோ வாட் அதற்கு மேல் ரூ.78 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படுகிறது.
நுகா்வோருக்கு வழங்கப்படும் மானியம், வங்கிக் கணக்கில் நேரடியாக சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாள்களில் இருந்து 30 நாள்களுக்குள் செலுத்தப்படும். விண்ணப்பங்கள் ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய் ல்ம்ள்ன்ழ்ஹ்ஹஞ்ட்ஹழ்.ஞ்ா்ஸ்.ண்ய் , ஜ்ஜ்ஜ் ல்ம்ள்ன்ழ்ஹ்ஹஞ்ட்ஹழ்.ஞ்ா்ஸ்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ள்ா்ப்ஹழ்ழ்ா்ா்ச்ற்ா்ல்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணைய தளங்கள் மூலமாகவும், ‘டங ள்ன்ழ்ஹ்ஹஞ்ட்ஹழ்‘, ‘ணதப ல்ம் நன்ழ்ஹ்ஹ எட்ஹழ் ஆகிய செயலிகள் மூலமாக பதிவு செய்யலாம். சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி, ‘பசுமையான, ஒளிமயமான எதிா்காலத்தைஉருவாக்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.