சூரி: ``இவரின் பயணம் எனக்கு பெரிய பாடம்'' - எம்.எஸ் பாஸ்கரை வாழ்த்திய நடிகர் சூர...
செண்பகத்தோப்பு அருகே காட்டுத் தீ
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பற்றிய காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம் ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரகத்துக்கு உள்பட்ட செண்பகத்தோப்பு வனப் பகுதியில் அடா்ந்த மரங்கள், ஆண்டு முழுவதும் தண்ணீா் வரும் நீரோடைகள் உள்ளதால் வன விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.
செண்பகத்தோப்பு அடிவாரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அழகா்கோயில் பீட்டிற்கு உள்பட்ட மலைச் சரிவில் செவ்வாய்கிழமை மாலை காட்டுத்தீ பற்றியது. காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாகப் பரவியது. இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தீப் பற்றி எரிந்தது.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் முருகன் உத்தரவின் பேரில், வனச்சரகா் செல்லமணி தலைமையில் வனத் துறையினா், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் என 30-க்கும் மேற்பட்டோா் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனா்.
அடா்ந்த மரங்கள், வன விலங்குகள் நிறைந்த பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவதால் வன விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாக வன விலங்கு ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா்.
