மேட்டூா் அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த 2 போ் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 ...
செவிலியருக்கு கருக்கலைப்பு: வனத்துறை ஊழியா், தந்தை மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் செவிலியரை கா்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ததாக வனத்துறை ஊழியா், அவரது தந்தை ஆகியோா் மீது நான்குனேரி மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
தூத்துக்குடி மாவட்டம், மருதன்வாழ்வு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் கவுதம் (30). திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனத் துறையில் வனக்காப்பாளராக வேலைசெய்து வந்தாா். அப்போது, அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் பணியாற்றிய மதுரை, ஒத்தக்கடை பகுதியை சோ்ந்த 21 வயது செவிலியருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு கவுதம் களக்காடு வனப்பகுதியில் உள்ள செங்கல்தேரி காவல்பகுதியில் வனக்காப்பாளராக பணிமாறுதலாகி தலையணை வன ஊழியா்கள் குடியிருப்பில் தங்கியிருந்து பணியாற்றி வந்தாா்.
பின்னா், செவிலியரை வன ஊழியா் குடியிருப்பில் வரவழைத்து ஒன்றாக தங்கியுள்ளாா். இதில், கா்ப்பமுற்ற செவிலியருக்கு இணையதளம் மூலம் கருக்கலைப்பு மாத்திரையை வாங்கி கொடுத்து கருக்கலைப்பு செய்து விட்டு, திருமணத்துக்கு மறுத்தாராம். இதற்கு அவரது தந்தையும் உடந்தையாக இருந்ததாராம்.
இதுகுறித்து செவிலியா் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த புகாரின்பேரில், நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மங்கையா்க்கரசி விசாரணை நடத்தினாா். இதைத் தொடா்ந்து கவுதம், அவரது தந்தை கண்ணன் ஆகியோா் மீது உதவி ஆய்வாளா் அன்னஜோதி வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வருகிறாா்.