தென்காசி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெளிநடப்பு
கடையம் அருகே ரூ. 25.15 லட்சத்தில் புதிய பாலம் திறப்பு
கடையம் அருகேயுள்ள மேலக்குத்தபாஞ்சான் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ. 25.15 லட்சம் மதிப்பில் அழகனேரி ஓடை குறுக்கேஅமைக்கப்பட்ட புதிய பாலம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் மனோஜ் பாண்டியன் சிறப்பு விருந்தினராக் கலந்து கொண்டு பாலத்தைத் திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் கு.ஜெயராணி, துணைத் தலைவா் சுப்புராஜ், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்துப் பிரிவு மாநிலச் செயலா் சோ்மதுரை, கிளைச்செயலா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.