செய்திகள் :

சேலம்: முன் விரோதம் காரணமாக இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு... அதிர்ச்சி வீடியோ!

post image

சேலம், திருமலைகிரி இடும்பன் வட்டம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வெள்ளிப் பட்டறை தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஜீவானந்தம் இருவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, வேடுகத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கும்பல் மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர் ஜீவானந்தம் ஆகிய இருவரையும் கடந்த 16.09.2025 அன்று காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிந்ததன்பேரில் இரும்பாலை காவல்துறையினர் காயமடைந்த மோகன்ராஜ் மற்றும் ஜீவானந்தமாக இருவரையும் விரைந்து சென்று மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் உயிரிழந்தார். மேலும் ஜீவானந்தம் என்ற இளைஞர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மோகன்ராஜ் இறப்பிற்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளைஞர்களை தாக்கிய காட்சி

இது தொடர்பாக இரும்பாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய 8 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோகன்ராஜ் மற்றும் ஜீவானந்தம் ஆகிய இருவரையும் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரவு பூஜை நடந்தபோது, வேடுகத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த நபர்களுக்கும், மோகன்ராஜ் தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்பகை காரணமாக மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர் ஜீவானந்தம் ஆகிய இருவரையும் காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன்ராஜ் உயிரிழந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட காளியப்பன், தங்கராஜ், செல்வம், இளங்கோ, சூர்யா, பிரகாஷ்,முருகன், கவினேஷ் ஆகிய எட்டு பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருமணத்துக்கு வற்புறுத்திய கர்ப்பிணி காதலியை கொன்றுவிட்டு 'ஒழிந்தாள்' என ஆட்டம் போட்ட காதலன்

மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரியைச் சேர்ந்தவர் பக்தி மாயகர் (26). இவர் கடந்த மாதம் 17ம் தேதி தனது தோழியை பார்க்கச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில... மேலும் பார்க்க

நீலகிரி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மிட்டாய் சப்ளை -கேரள போலீசில் சிக்கிய கூடலூர் இளைஞர்கள்

கஞ்சா மிட்டாய் கடத்தல்நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது. தேசிய அளவிலான வாகனப் போக்குவரத்து நிறைந்த இந்தச... மேலும் பார்க்க

அமெரிக்கா டு பஞ்சாப்; காதலனைக் கரம்பிடிக்க தேடிவந்த 71 வயது பெண் கொலை.. தீவிர விசாரணையில் காவல்துறை!

அமெரிக்க குடியுரிமைப் பெற்ற 71 வயது பெண் இந்தியாவுக்கு திருமணம் செய்துகொள்ள வந்த நிலையில், எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ருபிந்தர் கவுர் பாந்தர் (71). இவர் அமெரி... மேலும் பார்க்க

விருதுநகர்: ரூ.150 லஞ்சம் பெற்ற வழக்கு; 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டாஸ்மாக் முன்னாள் ஊழியர் கைது!

விருதுநகர், காந்திபுரம் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவரிடம் இருந்து 1998 ஜனவரி 22-ஆம் தேதி ரூ.150 லஞ்சம் பெற்றதாக டாஸ்மாக் மதுபானக் கிடங்கு உதவியாளர் பிரேம்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார... மேலும் பார்க்க

நெல்லை: பைக் மீது மோதல்; தட்டிக் கேட்ட இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்.ஐ

நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர், காந்திராஜன். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவரான இவர் நெல்லையை அடுத்த சுத்தமல... மேலும் பார்க்க

ATM Fraud: குறி வைக்கப்படும் ஏடிஎம் பயனாளர்கள்; பலே குற்றவாளி சிக்கியது எப்படி?

தமிழ்நாட்டில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க வருகிறவர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக கர்நாடகாவைச் சேர்ந்த பொறியாளரை காவல்துறை கைது செய்திருக்கிறது. சென்னையை அடுத்துள்ள பழைய பெருங்களத்தூரில் வசித்து வருப... மேலும் பார்க்க