செய்திகள் :

Jana Nayagan: ``ஜனநாயகன் திரைப்படம் ஒரு கம்ப்ளீட் மீல்ஸ்!" - அப்டேட் கொடுத்த இயக்குநர் அ.வினோத்

post image

விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் ரிலீசாக திரைக்கு வருகிறது.

அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல் ஆகியோரும் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அ.வினோத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் பி.டி.எஸ் காணொளிகயையும் வெளியிட்டிருந்தார்கள்.

Jananayagan
Jananayagan

அனிருத் இசையமைக்கும் 'ஜனநாயகன்' படத்தின் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போதுமே தன்னுடைய திரைப்படம் எப்படியான ஸ்டைலில் இருக்கும் என பெருமையாக அ.வினோத் பெரிதளவில் பொது வெளியில் பகிர்ந்துக் கொள்வதை விரும்பமாட்டார்.

ஆனால், 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பாக சமீபத்திய நிகழ்வில் படம் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர்.

அந்த நிகழ்வில் அ.வினோத், "ஜனநாயகன், விஜய் சாருக்கு பக்கா ஃபேர்வெல் திரைப்படமாக இருக்கும். மாஸ், கமர்ஷியல், ஆக்ஷன் என மூன்றையும் எதிர்பார்த்து படத்திற்கு வாங்க. திரைப்படம் நிச்சயமாக ஒரு கம்ப்ளீட் மீல்சாக இருக்கும்." எனக் கூறியிருக்கிறார்.

H Vinoth
H Vinoth

கடந்த ஜூன் மாதம் 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் கே நாராயணன், "தளபதியின் அசாதாரண சினிமா பயணத்திற்கு நியாயம் செய்யும் ஒரு படத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

'ஜன நாயகன்' ஃபேர்வெல் மட்டும் கிடையாது, இந்திய சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு ஐகானின் கொண்டாட்டமாகவும் இருக்கும்," எனக் கூறியிருந்தார்.

KPY Bala: ``எவ்வளவு வன்மம்; என்னை சர்வதேச கைகூலின்னு சொல்றாங்க!" - KPY பாலா காட்டம்!

KPY பாலா குறித்தான பேச்சுதான் கடந்த இரு தினங்களாக சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பியிருக்கிறது. சமீபத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்த ̀காந்தி கண்ணாடி' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.Gandhi Kannadi ... மேலும் பார்க்க

Robo Shankar: கணவரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய மனைவி; வளசரவாக்கத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம்!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (செப்டம்பர் 18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரின் மறைவுக்கு முதல்வர... மேலும் பார்க்க

சக்தித் திருமகன் விமர்சனம்: அதிகம் யோசிக்கவிடாத பரபர அரசியல் ஆக்ஷன் த்ரில்லர்தான்! ஆனா லாஜிக் சாரே?

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் தரகராக இருக்கிறார் கிட்டு (விஜய் ஆண்டனி). அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தொடங்கி, அரசு அலுவலகங்களில் இருக்கும் அடித்தட்டு ஊழியர்கள் வரை, ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பையும் கரை... மேலும் பார்க்க

Robo Shankar: ``என்னுடைய அடுத்த படத்திற்கு ரோபோ சங்கரை ஒப்பந்தம் செய்திருந்தேன்!'' - டி.ராஜேந்தர்

உடல்நலக் குறைவால் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமாகியிருக்கிறார். அவருடைய மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய உடல் சென்னை வளசரவாக்கத்திலுள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்... மேலும் பார்க்க