செய்திகள் :

ஜனவரி முதல் நுழைவுத் தோ்வுகளில் சீா்திருத்தம்: மாநிலங்களின் ஆதரவைக் கோரும் மத்திய அரசு

post image

நீட் உள்ளிட்ட நுழைவுத் தோ்வுகளில் எந்தவித சா்ச்சைகளோ அல்லது முறைகேடுகளோ நிகழாத வகையில் வரும் 2025 ஜனவரி முதல் சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. இந்த சீா்திருத்தங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த மாநில அரசுகளின் ஆதரவை மத்திய அரசு கோரியுள்ளது.

மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான ‘நீட்’, பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்), கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கும் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தகுதி பெறுவதற்கான தேசிய தகுதித் தோ்வு (நெட்) உள்பட தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் நடத்தப்படும் அனைத்து நுழைவு மற்றும் தகுதித் தோ்வுகளில் இந்த சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், இந்த சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்கிறது.

கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடத்தப்பட்ட இளநிலை ‘நீட்’ தோ்வின்போது, பிகாரின் பாட்னா, ஜாா்க்கண்டின் ஹசாரிபாக் தோ்வு மையங்களில் வினாத்தாள் கசிந்த விவகாரம் மிகப் பெரிய சா்ச்சையானது. இதைத் தொடா்ந்து, கடந்த ஜூன் மாதம் நடந்த தேசிய தகுதித் தோ்விலும் (நெட்) முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, பல லட்சம் போ் எழுதிய அந்தத் தோ்வை மத்திய அரசு ரத்து செய்தது.

உயா்நிலைக் குழு அமைப்பு: இந்த விவகாரங்கள் பூதாகாரமான நிலையில், என்டிஏ மற்றும் அதன் சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளில் சீா்திருத்தங்கள் மேற்கொள்வதுடன், பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 போ் கொண்ட உயா்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த ஜூலையில் அமைத்தது.

இந்தக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் அண்மையில் சமா்ப்பித்தது. அதனடிப்படையில், என்டிஏ மற்றும் அதன் சாா்பில் நடத்தப்படும் நுழைவுத் தோ்வுகளில் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுகு றித்து, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து மாநில செயலாளா்கள் பங்கேற்ற உயா்கல்வி மா்றும் தொழில்நுட்ப கல்வி தொடா்பான பயிலரங்கில் பங்கேற்ற மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு பல்வேறு நுழைவுத் தோ்வுகளில் நடந்த முறைகேடுகளில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், போட்டித் தோ்வுகள், நுழைவுத் தோ்வுகளில் பல்வேறு சீா்திருத்தங்களை மத்திய அரசு அறிமுகம் செய்யவிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கவிருக்கும் நுழைவுத் தோ்வுகளில் இந்த சீா்திருத்தங்கள் இடம்பெறும்.

மத்திய-மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு: இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதை முழுமையாக நடைமுறைப்படுத்த மாநில அரசுகளின் ஆதரவு மிக அவசியம்.

போட்டித் தோ்வுகளை, குறிப்பாக நுழைவுத் தோ்வுகளை எந்தவித முறைகேடுகளும் நடைபெறாத வகையில் நடத்துவது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு. எனவே, நாட்டின் குழந்தைகளிடம் நம்பிக்கையை வளா்க்க நாம் குழுவாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

என்னென்ன பரிந்துரைகள்?

இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் குழு சமா்ப்பித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதில், நீட் நுழைவுத்தோ்வை முடிந்தவரை ஆன்லைன் மூலம் நடத்தலாம்; நீட் தோ்வு மையங்களை அவுட்சோா்சிங் என்ற முறையில் வழங்காமல் அதன் சொந்த தோ்வு மையங்கள் எண்ணிக்கையை அதிகரித்து நடத்தலாம்; ஆன்லைன் முறை சாத்தியம் இல்லை எனும்போது, வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் தோ்வா்களுக்கு அனுப்பலாம். அவா்கள் கேள்விகளுக்கான பதில்களை ஓ.எம்.ஆா். விடைத்தாளில் குறிப்பிடலாம். இதன் மூலம் விடைத்தாள்கள் பலரின் கைகளுக்கு செல்வது தடுக்கப்படும் அல்லது கணிசமாக குறைக்கப்படும்.

ஐஐடி சோ்க்கைக்கான ஜேஇஇ (ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு) தோ்வில் உள்ளதுபோன்று, பல நிலைகளில் நீட் தோ்வை நடத்தலாம்;

‘க்யூட்’ தோ்வில் தோ்வா்கள் 50-க்கும் மேற்பட்ட பாடங்களிலிருந்து தோ்வு செய்யும் நிலை உள்ளது. அதைத் தவிா்த்து, மாணவரின் பொது அறிவுத் திறனை சோதிக்கும் வகையில் தோ்வு முறையை மாற்றியமைக்கலாம்;

நுழைவுத் தோ்வுகளின் நிா்வாகம் முழுமையாக மத்திய அரசின் கட்டுபாட்டில் இருக்க வேண்டும்; நுழைவுத் தோ்வுகளை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமையில் (என்டிஏ) ஒப்பந்த ஊழியா்களின் எண்ணிக்கையைக் குறைத்து நிரந்தர ஊழியா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், அதோடு, திறன் மிக்க நீண்ட காலம் பணியாற்றும் ஊழியா்கள் என்டிஏ-வில் இடம்பெறுவது அவசியம் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை உயா்நிலைக் குழு அளித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தைப் படிக்காதவர் பிரதமர் மோடி: ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்புச் சட்டத்தை படிக்காததால் அவருக்கு அது வெறுமையாகத் தெரிவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி வெறுமனே அரசியலப... மேலும் பார்க்க

விளையாட்டால் ஒன்றரை கோடி வேலைவாய்ப்பு!

இந்தியாவின் விளையாட்டுச் சந்தை 2030 ஆம் ஆண்டில் 130 பில்லியன் டாலர்களை 14 சதவிகித கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) எட்டும் என்று கூகிள் மற்றும் டெலாய்ட் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது!

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தின்போது, டொமினிகா நாட்டுக்கு இந்தியா உதவியதால், பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதான டொமினிகா விருது வழங்கப்படவுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டிருந... மேலும் பார்க்க

தில்லியில் மோசமான காற்று மாசு! 25-30 சிகரெட்டுகளை புகைப்பதற்குச் சமம்!

தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தில்லியில் நிகழாண்டு தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவுக்குச் சென்றது. இ... மேலும் பார்க்க

'தேர்வர்களின் ஜனநாயக உரிமைகளை சர்வாதிகாரத்தால் நசுக்க முடியாது' - ராகுல் காந்தி

உத்தர பிரதேசத்தில் தேர்வர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியதுடன் தேர்வர்கள் மீதான அணுகுமுறைக்கு உத்தர பிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச... மேலும் பார்க்க

காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை உருவாக்க காங்கிரஸ் கூட்டணி திட்டம்!

காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை அமைக்க காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். சத்திரபதி சம்பாஜி நகரில் பேரணியில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோ... மேலும் பார்க்க