செய்திகள் :

பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது!

post image

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தின்போது, டொமினிகா நாட்டுக்கு இந்தியா உதவியதால், பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதான டொமினிகா விருது வழங்கப்படவுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டிருந்த 2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில், பிப்ரவரி மாதத்தில் டொமினிகா நாட்டுக்கு 70,000 டோஸ் அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசியை பிரதமர் மோடி வழங்கினார். இதன்மூலம், இந்தியா அளித்த தடுப்பூசியை, டொமினிகா தனது அண்டை நாடுகளுக்கும் அளித்து உதவியது.

இந்த நிலையில், தக்க சமயத்தில் டொமினிகா நாட்டுக்கு இந்தியா உதவியதையடுத்து, பிரதமர் மோடியை கௌரவிக்கும் விதமாக, அவருக்கு டொமினிகா நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதான டொமினிகா விருதை அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதையும் படிக்க:நெருப்பாக இருக்கிறதா சூர்யாவின் கங்குவா? திரை விமர்சனம்!

இந்த விருதை, கயானாவின் ஜார்ஜ்டவுனில் நவம்பர் 19 முதல் 21 வரையில் நடைபெறும் இந்தியா - கரிகாம் (CARICOM - The Caribbean Community and Common Market) உச்சி மாநாட்டின்போது, பிரதமர் மோடிக்கு காமன்வெல்த் டொமினிகா தலைவர் சில்வானி பர்ட்டன் வழங்கவுள்ளார்.

இதுகுறித்து, டொமினிகா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது, ``கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் டொமினிகாவுக்கு இந்தியா அளித்த ஆதரவையும், காலநிலை பின்னடைவை உருவாக்கும் முயற்சிகள், உலக அளவில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதில் பிரதமர் மோடியின் பங்கையும் இந்த விருது அங்கீகரிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது’’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வாட்ஸ்ஆப்-க்கு தடை கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மத்திய அரசின் விதிமுறைகளுக்கு இணங்க மறுப்பதால், இந்தியாவில் வாட்ஸ்ஆப் சேவைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. இது தொடா்பாக, கேரளத்த... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடர் இல்லை -மத்திய அரசு

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என்று மாநில அரசிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வயநாட்டின் புஞ்சிரிமட்டம், சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ... மேலும் பார்க்க

மருந்தின் பக்க விளைவுகளை நோயாளிகளுக்கு மருத்துவா்கள் தெரிவிக்க கோரிய மனு தள்ளுபடி

நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த விவரங்களை மருந்துச் சீட்டில் மருத்துவா்கள் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்க... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டம் அமல்

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜிரிபாம் மாவட்ட காவல் நிலையம் உள்பட 6 காவல் நிலைய பகுதிகளில் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை மத்திய அரசு மீண்டும் வியாழக்கிழமை அமல்படுத்தியது. முன்ன... மேலும் பார்க்க

சோனியாவின் ‘ராகுல் விமானம்’ ஜாா்க்கண்டிலும் நொறுங்குவது உறுதி: அமித் ஷா

‘காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி தனது மகனும் எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்க 20 முறை முயற்சித்துவிட்டாா். தற்போது, 21-ஆவது முயற்சியாக அவா் அனுப்... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணி கைது

நாகபுரியில் இருந்து வியாழக்கிழமை கொல்கத்தா சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவசரமாக அது ராய்பூரில் தரையிறக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பயணி ஒருவா் கைது செய்யப... மேலும் பார்க்க