செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரில் 76 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகத் தகவல்!

post image

ஜம்மு - காஷ்மீரில் செயல்பாட்டில் உள்ள 76 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் அதில் 59 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு - காஷ்மீரில் கடந்தாண்டு 91 பயங்கரவாதிகள் செயல்பாட்டில் இருந்ததாகத் தரவுகள் தெரிவித்தன. அதனுடன் ஒப்பிடுகயில், இந்தாண்டு அந்த எண்ணிக்கை குறைந்து 76 தீவிரவாதிகள் தற்போது செயல்பாட்டில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில், 17 பேர் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்களில் 3 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன், 21 பேர் ஜெய்ஸ்-இ-முகமது, 35 பேர் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

கடந்தாண்டு செயல்பாட்டில் இருந்த 91 பயங்கரவாதிகளில் 61 பேர் வெளிநாட்டவர்கள்.

இதையும் படிக்க | ஆர்எஸ்எஸ் ஒழிக! கோஷமிட்ட காந்தியின் கொள்ளுப் பேரன்! என்ன நடந்தது?

இந்தத் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு 135 பயங்கரவாதிகள் ஜம்மு - காஷ்மீரில் செயல்பாட்டில் இருந்தனர். அந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 48.35 % குறைந்தது. தற்போது அது மேலும் குறைந்துள்ளது.

ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டதே காரணமாகும். மேலும், செயல்பாட்டில் உள்ளவர்களைக் கண்காணித்து பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


புலனாய்வு துறை அமைப்புகள் இங்குள்ள பகுதிகளில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை அடையாளம் கண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகள் 2001-ல் இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2016-ல் ஊரி தாக்குதல், 2019-ல் புல்வாமா குண்டுவெடிப்பு உள்ளிட்ட பெரிய தாக்குதல்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்புகள் எல்லைக்கு அப்பால் உள்ள ஆதரவுடன் இங்கு செயல்பட்டு வருகின்றன.

ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு தொடர்ந்து உள்ளூர் ஆள்களை தங்கள் அமைப்பில் சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

சமீப காலங்களில், காஷ்மீரில் உள்நாட்டு பயங்கரவாதிகளின் எழுச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரிதும் பங்களித்துள்ளது. இருப்பினும், பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக அமைப்புகளின் ஆட்சேர்ப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 72 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் 22 பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள். 2022 ஆம் ஆண்டில் 130 உள்நாடு பயங்கரவாதிகள் உள்பட மொத்தம் 187 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக்கொலை!

பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாபின் மோகா மாவட்டத்தின் சிவசேனை கட்சித் தலைவர் மங்கத் ராய் என்ற மங்கா மீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்... மேலும் பார்க்க

காகித, அட்டை இறக்குமதி 10% அதிகரிப்பு

கடந்த ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் இந்தியாவின் காகிதம் மற்றும் அட்டை இறக்குமதி 20அதிகரித்துள்ளது.இது குறித்து இந்திய காகித உற்பத்தியாளா்கள் சங்கம் (ஐபிஎம்ஏ) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெர... மேலும் பார்க்க

தேஜஸ் போா் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை, மற்றொரு உள்நாட்டு தயாரிப்பானதேஜஸ் இலகு ரக போா் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. வானில் இருந்து 100 கி.மீ. தொலைவுக்கு மேல் பாய்ந்து வானில் ... மேலும் பார்க்க

ம.பி.: நிறுவிய இரு நாள்களில் அம்பேத்கா் சிலை மாயம் காவல் துறை வழக்குப் பதிவு

மத்திய பிரதேசத்தின் சத்தா்பூா் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் நிறுவப்பட்ட அம்பேத்கா் சிலை இரு நாள்களில் மாயமானது. அதனை எடுத்துச் சென்றது யாா் என்பது தெரியாத நிலையில், காவல் துறையினா் வழக்குப் பதிவு செய... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிரான கருத்து: கேரளத்தில் துஷாா் காந்தியின் காரை முற்றுகையிட்டு போராட்டம்

கேரளத்தில் ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிராக தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷாா் காந்தியின் காரை முற்றுகையிட்டு பாஜக-ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால... மேலும் பார்க்க

பிருந்தாவனம் கோயிலில் மூலவருக்கு முஸ்லிம்கள் செய்த ஆடைகளை பயன்படுத்த தடை கோரிக்கை: அா்ச்சகா்கள் நிராகரிப்பு

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள பிருந்தாவனம் பாங்கே பிஹாரி கோயிலில் மூலவா் கிருஷ்ணருக்கு முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட ஆடைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கோயில் அா்ச்சகா்கள் ... மேலும் பார்க்க