செய்திகள் :

ஜஸ்டின் ட்ரூடோ காணாமல் போய் விடுவார்: கனடா தேர்தலில் எலான் கணிப்பு!

post image

2025 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள கனடா தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ இருக்க மாட்டார் என்று எலான் மஸ்க் கணித்துள்ளார்.

இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தொடா்ந்து குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

மேலும், உலக நாடுகளிலும் கனடா மீதான விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவின் கூட்டணி கட்சியினரும் அவருடனான கூட்டணியில் இருந்து விலகவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜெர்மனி அதிபரை `முட்டாள்’ என்று விமர்சித்த எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க், ஜெர்மனியில் கூட்டணி அரசு வீழ்ச்சி அடையும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க:நாட்டின் மிகப்பெரிய கொடைவள்ளல் யார்? அம்பானியோ அதானியோ அல்ல!

இதனைத் தொடர்ந்து, எக்ஸ் பயனர் ஒருவர் ``கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நீக்குவதற்கும் உங்கள் உதவி தேவை’’ என்று எலான் மஸ்க்கிடம் (நகைச்சுவையைப் போல்) கோரினார். அவருக்கு பதிலளித்த எலான் மஸ்க், `2025 ஆம் ஆண்டு தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ காணாமல் போய்விடுவார்’’ என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அடுத்தாண்டு அக்டோபருக்குள் நடக்கவிருக்கும் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ பெரும் சவாலைச் சந்திக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதாரத்தில் உலக நாடுகளை இந்தியா வழிநடத்துகிறது: புதின்

பொருளாதாரத்தில் முன்னேறி வருவதாகத் தெரிவித்த ரஷிய அதிபர் புதின், பொருளாதாரத்தில் உலக நாடுகளை இந்தியா வழிநடத்தி வருவதாகவும் கூறினார்.ரஷியாவில் சோச்சியில் நடைபெற்ற வால்டாய் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ... மேலும் பார்க்க

சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை: ஜனவரி 1 முதல் அமல்!

பல்வேறு மக்களின் எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில், முகத்தை மூடியபடி பொது வெளிகளில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறை வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வ... மேலும் பார்க்க

வேலூ‌ர் விஐடி, செ‌ன்னை‌ ஐஐடி ஸ்டா‌ர்‌ட்​அ‌ப் குழு‌க்​க‌ள் டெ‌ன்மா‌ர்‌க்கி‌ல் கௌ​ர​வி‌ப்பு

தில்லி: உலகளாவிய தண்ணீர் பிரச்னைக்கு உறுதியான புத்தாக்க தீர்வை வழங்கியதற்காக வேலூர் விஐடி, சென்னை ஐஐடியை சேர்ந்த ஸ்டார்ட்அப் குழுக்கள் உள்ளிட்ட ஐந்து குழுக்களுக்கு டென்மார்க்கில் பாராட்டு தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

பிரேஸில் இருந்து உளுந்து, துவரை இறக்குமதியை மேலும் அதிகரிக்க முடிவு

பிரேஸிலில் இருந்து உளுந்து, துவரம் பருப்பு இறக்குமதியை மேலும் அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியா வந்துள்ள பிரேஸில் வேளாண் துறை பிரதிநிதிகளுடன் தில்லியில் புதன்கிழமை இது தொடா்பாக நுகா்வோா் ... மேலும் பார்க்க

தலிபான் பாதுகாப்பு அமைச்சருடன் இந்தியா முதல் முறையாகப் பேச்சு

ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான் பாதுகாப்பு அமைச்சா் முகமது யாகூப் முஜாஹித்துடன் இந்தியா முதல்முறையாக இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் புதன்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

படேலின் வழிகாட்டுதலைப் பின்பற்றி பணியாற்றினேன்: பிரிட்டன் நிழல் வெளியுறவு அமைச்சா் ப்ரீத்தி படேல்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் உள்துறை அமைச்சராக பதவிவகித்தபோது இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சா்தாா் வல்லபபாய் படேலின் வழிகாட்டுதலைத் பின்பற்றி பணியாற்றினேன் என்று குஜராத்தை பூா்வீகமாகக்... மேலும் பார்க்க