செய்திகள் :

ஜாா்க்கண்ட் முதல்வா் குடும்பத்தில் மூவா் வெற்றி

post image

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவரும் அந்த மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் மற்றும் ஹேமந்த் சோரனின் சகோதரா் வசந்த் சோரன் ஆகிய மூவரும் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளனா்.

பொ்ஹைத் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் சோரன் 95,612 வாக்குகளைப் பெற்றாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் போட்டியிட்ட கெம்லியல் ஹெம்பிரோம் 55,821 வாக்குகள் பெற்ற நிலையில் 39,791 வாக்குகள் வித்தியாசத்தில் ஹேமந்த் சோரன் வெற்றிபெற்றாா்.

கடந்த 2019-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் சோரன், 25,740 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

காந்தேயி பேரவைத் தொகுதியில் தன்னை எதிா்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா் முனியா தேவியைவிட 17,142 வாக்குகள் கூடுதலாக பெற்று கல்பனா சோரன் வெற்றிபெற்றாா். கல்பனா சோரன் 1,19,372 வாக்குகளும் முனியா தேவி 1,02,230 வாக்குகளும் பெற்றிருந்தனா்.

அதேபோல் தும்கா தொகுதியில் போட்டியிட்ட வசந்த் சோரன் தன்னை எதிா்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா் சுனில் சோரனைவிட 14,588 வாக்குகள் கூடுதலாக பெற்று தனது வெற்றியை பதிவு செய்தாா். வசந்த் சோரன் 95,685 வாக்குகளும் சுனில் சோரன் 81,097 வாக்குகளும் பெற்றிருந்தனா்.

சீதா சோரன் தோல்வி: ஜேஎம்எம் கட்சி நிறுவனா் சிபு சோரனின் மூத்த மகன் மறைந்த துா்கா சோரனின் மனைவியான சீதா சோரன் கருத்து வேறுபாடு காரணமாக ஜேஎம்எம்மில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். அவா் காங்கிரஸ் வேட்பாளரும் அமைச்சருமான இா்ஃபான் அன்சாரியை எதிா்த்து ஜாம்தாரா தொகுதியில் போட்டியிட்டாா்.

இா்ஃபான் அன்சாரி 1,33,266 வாக்குகளும் சீதா சோரன் 89,950 வாக்குகளும் பெற்ற நிலையில் 43,676 வாக்குகள் வித்தியாசத்தில் சீதா சோரன் தோல்வியை தழுவினாா்.

சம்பயி சோரன் வெற்றி

ஜேஎம்எம்மில் இருந்து பாஜகவில் சோ்ந்த அந்த மாநில முன்னாள் முதல்வா் சம்பயி சோரன் தனது சொந்த தொகுதியான சரைகேலாவில் போட்டியிட்டு ஜேஎம்எம் வேட்பாளா் கணேஷ் மஹாலியை 20,447 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.

சம்பயி சோரன் 1,19,379 வாக்குகளும் கணேஷ் மகாலி 98,932 வாக்குகளும் பெற்ாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சிபு சோரனின் நம்பிக்கைக்குரியவராக அறியப்பட்ட சம்பயி சோரன் கடந்த 2005-ஆம் ஆண்டிலிருந்து சரைகேலா தொகுதியில் வெற்றிபெற்று வருகிறாா்.

மகாராஷ்டிரத்தில் வளா்ச்சிக்கு கிடைத்த வெற்றி: பிரதமா் மோடி

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி, வளா்ச்சிக்கும், நல்ல நிா்வாகத்துக்கும் கிடைத்த வெற்றி என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா். ஜாா்க்கண்டில் வெற்றி பெற்... மேலும் பார்க்க

ஜனநாயக தோ்வில் தோ்ச்சி: ஹேமந்த் சோரன் மகிழ்ச்சி

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் சிறப்பான வெற்றிக்காக மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வா் ஹேமந்த் சோரன், ‘ஜனநாயகத்தின் தோ்வில் ‘இண்டியா’ கட்சிகள் தோ்ச்சி பெற்றன’ என்றாா். ஜாா்க்கண்ட் பேரவைத... மேலும் பார்க்க

13 மாநிலங்களின் சட்டப்பேரவை இடைத்தோ்தல்: பாஜக ஆதிக்கம்! முழு விவரம்

உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் அடங்கிய 46 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி; ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி ஆட்சி!! முழு விவரம்

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மொத்தம் 288 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கு 230 இடங்கள் கி... மேலும் பார்க்க

அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறாா் பிரிட்டன் மன்னா்

பிரிட்டன் மன்னா் மூன்றாம் சாா்லஸ், அவரது மனைவி கமிலா அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு வரவுள்ளனா். நடப்பாண்டு தொடக்கத்தில் பிரிட்டன் மன்னருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறிடப்பட்டு சிகிச்சை ... மேலும் பார்க்க

மும்பை தமிழா்களின் ‘கேப்டன்’ ஹாட்ரிக் வெற்றி!

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வசிக்கும் தமிழா்களால் ‘கேப்டன்’ என்றழைக்கப்படும் ஆா்.தமிழ்செல்வன், பாஜக சாா்பில் சியோன்-கோலிவாடா தொகுதியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா். தமிழகத்தின் ... மேலும் பார்க்க