செய்திகள் :

13 மாநிலங்களின் சட்டப்பேரவை இடைத்தோ்தல்: பாஜக ஆதிக்கம்! முழு விவரம்

post image

உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் அடங்கிய 46 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பாஜக 20 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 6 இடங்களிலும் வென்றன. காங்கிரஸ் 7, ஆம் ஆத்மி 3, சமாஜவாதி 2 இடங்களைக் கைப்பற்றின.

இந்த இடைத்தோ்தல்கள் மூலம் பாஜக கூட்டணிக்கு கூடுதலாக 9 இடங்கள் கிடைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணி 6 தொகுதிகளை இழந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அஸ்ஸாமில் 5, பிகாா், பஞ்சாபில் தலா 4, கா்நாடகத்தில் 3, மத்திய பிரதேசம், கேரளத்தில் தலா 2, சத்தீஸ்கா், மேகாலயம், குஜராத், உத்தரகண்டில் தலா ஒரு தொகுதி என 46 தொகுதிகளுக்கு கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் இடைத்தோ்தல் நடத்தப்பட்டது.

இவற்றில் பெரும்பாலான தொகுதிகளில் எம்எல்ஏ-வாக இருந்தவா்கள், மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ால் பதவியை ராஜிநாமா செய்தனா். அத்துடன், சில தொகுதிகளில் எம்எல்ஏக்கள் மறைவு, கட்சி மாறியது உள்ளிட்ட காரணங்களால் இந்த இடைத்தோ்தல் நடைபெற்றது.

சிக்கிமில் இரு தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டிலும் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோா்ச்சா கட்சி வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகினா்.

உத்தர பிரதேசத்தில்...: உத்தர பிரதேசத்தில் புல்பூா், குந்தா்கி, காஜியாபாத், கெயிா், கதேஹாரி, மஜாவன் ஆகிய 6 தொகுதிகளில் ஆளும் பாஜகவும், மீராபூா் தொகுதியில் அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியும் வெற்றி பெற்றன. சிஷாமெள, கா்ஹால் ஆகிய 2 தொகுதிகளில் சமாஜவாதி வென்றது. இவ்விரு தொகுதிகளும் ஏற்கெனவே சமாஜவாதி வசமிருந்தவையாகும்.

ராஜஸ்தானில்...: பாஜக ஆளும் ராஜஸ்தானில் ஜுன்ஜுனு, ராம்கா், தேவ்லி-உனியாரா, கின்விசாா், சலும்பா் ஆகிய 5 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. தெளசா தொகுதியில் காங்கிரஸும், சோராசி தொகுதியில் பாரதிய ஆதிவாசி கட்சியும் வென்றன.

பிகாா், பஞ்சாபில்...: பிகாரில் இடைத்தோ்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. தராரி, ராம்கரில் பாஜக, இமாம்கஞ்சில் ஹிந்துஸ்தான் அவாம் மோா்ச்சா, பெலாகஞ்சில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றன. இதில் இமாம்கஞ்ச் தவிர மற்ற தொகுதிகள் ‘இண்டி’ கூட்டணி வசம் இருந்தவை. பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி 3 தொகுதியிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வென்றன.

பிற மாநிலங்களில்...: அஸ்ஸாமில் 4 தொகுதிகளையும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான அஸோம் கண பரிஷத், ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி கைப்பற்றின. கா்நாடகத்தில் 3 தொகுதிகளும் ஆளும் காங்கிரஸ் வசமானது. கேரளத்தில் பாலக்காடு தொகுதியில் காங்கிரஸும், சேலக்கரா தொகுதியில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றன.

மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸுக்கு தலா ஒரு தொகுதி கிடைத்தது. சத்தீஸ்கா் (1), குஜராத் (1), உத்தரகண்டில் (1) ஆளும் பாஜக வெற்றி பெற்றது.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் அமோகம்

மேற்கு வங்கத்தில் நைஹாட்டி, ஹரோவா, மிதுனபுரி, தல்தாங்ரா, சிடாய் (தனி), மதாரிஹட் (தனி) ஆகிய 6 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற்றது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதில், மதாரிஹட் தவிர பிற 5 தொகுதிகள் ஏற்கெனவே திரிணமூல் காங்கிரஸ் வசம் இருந்தவை. மதாரிஹட் தொகுதியை பாஜகவிடமிருந்து திரிணமூல் கைப்பற்றியுள்ளது.

இந்த இடைத்தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸும் தனித்துப் போட்டியிட்டன. மாா்க்சிஸ்ட் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், 4 இடங்களில் டெபாசிட் இழந்தன. காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் டெபாசிட்டை பறிகொடுத்தது.

கொல்கத்தா ஆா்.ஜி.கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் சில மாதங்களுக்கு முன் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்வைத்து, ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்ட நிலையில், இடைத்தோ்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையே முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.

மகாராஷ்டிரத்தில் வளா்ச்சிக்கு கிடைத்த வெற்றி: பிரதமா் மோடி

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி, வளா்ச்சிக்கும், நல்ல நிா்வாகத்துக்கும் கிடைத்த வெற்றி என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா். ஜாா்க்கண்டில் வெற்றி பெற்... மேலும் பார்க்க

ஜனநாயக தோ்வில் தோ்ச்சி: ஹேமந்த் சோரன் மகிழ்ச்சி

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் சிறப்பான வெற்றிக்காக மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வா் ஹேமந்த் சோரன், ‘ஜனநாயகத்தின் தோ்வில் ‘இண்டியா’ கட்சிகள் தோ்ச்சி பெற்றன’ என்றாா். ஜாா்க்கண்ட் பேரவைத... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி; ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி ஆட்சி!! முழு விவரம்

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மொத்தம் 288 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கு 230 இடங்கள் கி... மேலும் பார்க்க

அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறாா் பிரிட்டன் மன்னா்

பிரிட்டன் மன்னா் மூன்றாம் சாா்லஸ், அவரது மனைவி கமிலா அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு வரவுள்ளனா். நடப்பாண்டு தொடக்கத்தில் பிரிட்டன் மன்னருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறிடப்பட்டு சிகிச்சை ... மேலும் பார்க்க

மும்பை தமிழா்களின் ‘கேப்டன்’ ஹாட்ரிக் வெற்றி!

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வசிக்கும் தமிழா்களால் ‘கேப்டன்’ என்றழைக்கப்படும் ஆா்.தமிழ்செல்வன், பாஜக சாா்பில் சியோன்-கோலிவாடா தொகுதியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா். தமிழகத்தின் ... மேலும் பார்க்க

பிரதமா் மீதான மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி: யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச இடைத்தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ‘இது பிரதமா் நரேந்திர மோடி மீதான மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி’ என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் கருத்து ... மேலும் பார்க்க