2047-இல் ஒவ்வொரு துறையிலும் இந்தியாதான் நம்பர்-1 என்பதே குறிக்கோள்: அமித் ஷா
ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி: நிர்மலா சீதாராமன்
சென்னை: ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜிஎஸ்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து பேசினார்.
அப்போது, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்தது. ஆனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு 1.50 கோடியாக உயர்ந்துள்ளது. இது மிகப்பெரிய வெற்றி. ஒரு நாள் பிரதமர் மோடி என்னை அழைத்து ஜிஎஸ்டி குறித்து பல்வேறு விமரிசனங்கள் வருகிறது. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என கூறினார்.
இதையடுத்து 8 மாதங்களாக எல்லாப் பொருள்களையும் ஆய்வு செய்து வரிகளை மாற்று அமைத்தோம்.
நாடு முழுவதும் பல்வேறு பண்டிகை நாள்களை வரவேற்கும் வகையில், தீபாவளி முன்பே ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் உத்தரவிட்டிருந்த நிலையில், நவராத்திரிக்கு முன்பே ஜிஎஸ்டி வரியை குறைத்துவிட்டோம். இதன் மூலம் 140 கோடி பேர் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களின் மதிப்பு குறைந்து, அவர்களின் மீதான வரிச்சுமை குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். இது ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றார்.
56 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இது மாநிலங்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட முடிவு. இந்த வரி சீர்திருத்தங்கள் மக்களுடன் சேர்த்து மாநிலங்களுக்கும் பயனளிக்கும். ஜிஎஸ்டி வரியால் ஒரு மாதத்திற்கு ரூ.1.9 லட்சம் கோடி வரி கிடைக்கிறது. அதில் 23 சதவீதம் மத்திய அரசுக்கு கிடைக்கும், 77 சதவீதம் மாநிலங்களுக்குதான் பகிரிந்தளிக்கப்படுகிறது என்று கூறிய நிர்மலா சீதாராமன், ஆனால் பிரதமரை பாராட்டுவதற்கு சிலருக்கு மனம் இல்லை என்றார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் சலுகைகள் இப்போது மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தொடுவதாக தெரிவித்தார்.
புதிய ஜிஎஸ்டியான 5% மற்றும் 18% என்ற இரண்டு விகிதங்களை மட்டுமே கொண்டிருக்கும். புகையிலைப் பொருள்கள், மதுபானங்கள் போன்றவைகள் மீது 40 சதவீதம் வரி விதிக்கப்படும். உணவுப் பொருட்கள், மருந்துகள், காப்பீடு, தினசரி பயன்படுத்தப்படும் பொருள்கள், செல்போன்கள், தொலைக்காட்சி, குளிர்சாதனங்கள், கணினி, மடிக்கணிகள் போன்ற 99 சதவீத பொருட்களின் ஜிஎஸ்டி 12 சதவீதம் அல்லது 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி குறைப்பு நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறினார்.
மேலும், உயர் வெப்பநிலை பால், பன்னீர், இந்தியன் பிரெட் போன்றவை பூச்சிய சதவீதமாகவும், நாப்கீன், சாஸ், பாஸ்தா, சாக்லேட், காபி, கார்ன்பிளேக்ஸ், வெண்ணெய் போன்றவற்றுக்கு 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர், விவசாயம், சுகாதாரம் சார்ந்த துறைகளுக்கு இந்த புதிய வரி குறைப்பு பெரும் நிவாரணம் அளிக்கும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.