2047-இல் ஒவ்வொரு துறையிலும் இந்தியாதான் நம்பர்-1 என்பதே குறிக்கோள்: அமித் ஷா
2047-இல் ஒவ்வொரு துறையிலும் இந்தியாதான் முதன்மை நாடாக இருக்கும் என்று அமித் ஷா குறிப்பிட்டு பேசியுள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டுளள ‘வீர சாவர்க்கர் விளையாட்டு வளாகம்’ திறப்பு விழா இன்று(செப். 14) நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய அமித் ஷா: “2036-இல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த மத்திய அரசு ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பிரதமர் மோடி நமக்கு இலக்கு ஒன்றை வைத்துள்ளார். அது என்னவெனில், 2047-இல் உலகில் ஒவ்வொரு துறையிலும் நம்பர்-1 ஆக இந்தியாவை மாற்ற வேண்டுமென்பதே! அவற்றுள் விளையாட்டும் ஒன்று” என்றார்.
இதையும் படிக்க:இந்தி பிற மொழிகள் இடையே மோதல் இல்லை: அமித் ஷா