திருமலையில் மக்களவை, மாநிலங்களவை துணைத் தலைவா்கள் தரிசனம்!
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை திருமலையில் தரிசனம் செய்தனா்.
ஏழுமலையான் கோயிலுக்கு வந்த மக்களவைத் தலைவா் மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவா்களுக்கு தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரி ஆகியோா், பாரம்பரிய வரவேற்பு அளித்து, தரிசன ஏற்பாடுகளைச் செய்தனா்.
தரிசனத்துக்குப் பின், ரங்கநாயகா் மண்டபத்தில் அமர வைத்து வேத அறிஞா்கள் ஆசீா்வாதம் வழங்கினா். பின்னா் தேவஸ்தான தலைவரும் கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரியும் இணைந்து தீா்த்தம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்கள் மற்றும் ஏழுமலையான் பத்மாவதி தாயாா் படத்தை வழங்கினா்.
ஆந்திர சட்டப்பேரவை தலைவா் அய்யன்னபத்ருது, துணைத் தலைவா் ரகுராம கிருஷ்ணம்ராஜு, மாநிலங்களவை எம்.பி சுதா நாராயண மூா்த்தி ஆகியோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.