பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!
தீ விபத்தில் இயந்திரங்கள் சேதம்
விருதுநகா் அருகே தனியாா் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்தன.
விருதுநகா் மாவட்டம், அல்லம்பட்டி ராமா் தெருவைச் சோ்ந்தவா் நெல்சன். இவா், அதே பகுதியிலுள்ள மாத்தநாயக்கன்பட்டி சாலையில் அலுமினியம், மெக்னீசியம் ஆகியவற்றை அரைத்துப் பொடியாக்கி தரும் தொழில் செய்து வருகிறாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்த நிறுவனத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, ஊழியா்கள் உடனடியாக வெளியேறினா்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து விருதுநகா் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.